Breaking News

யார் ஜெயித்தாலும் எனக்கு தலைவர் ரஜினிகாந்த் தான்!


யார் ஜெயித்தாலும் - யார் என்ன சொன்னாலும் என் தலைவர் என்றும் ரஜினி தான்.

30 வருடங்களாக ரஜினியைப் பின் தொடர்பவன் நான். 

வாலிபனாக, உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு என்று பேசித் திரிந்த - என் ரஜினி வெறி என் ரத்தம் சூடாக இருக்கும் வரை அடங்காது!

என் ரசிகர்கள் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் என்று சொன்ன ஒரே தலைவர் ரஜினி

தலைவரே உனக்கு ரசிகனாக இருப்பதில் இன்றைக்கும் என்றைக்கும் எனக்கு மகிழ்ச்சி தான் 🤩🙏



தலைவர் அவர்கள் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தெரிவித்த ஒன்றுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது. ஆம் அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்று கூறினார். தலைவர் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. மக்கள் திராவிட கட்சிகளான திமுக அதிமுக இந்த திராவிடத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஒரு பெரும் தலைவரை எதிர்பார்த்து காத்திருந்தனர் அந்த காத்திருப்புக்கு தலைவர் மிகுந்த தகுதியானவர். பல்வேறு காரணங்களால் அவர் அரசியலுக்கு வராமல் போனது மக்கள் இடையே மிகுந்த வேதனை அடைந்தார்கள் இனியும் திராவிடம் தான் நம்மளை ஆட்சி செய்யப் போகிறதா என்று இருந்தபோது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜய் அரசியலுக்கு வந்ததை மக்கள் கண்மூடித்தனமாக நம்பினார்கள் அந்த கண்மூடித்தனமானது என்னவென்றால் வாக்கு செலுத்தும் பொழுது கூட யார் வேட்பாளர் என்று கூட கவனிக்காமல் விசில் சின்னத்தில் தனது வாக்கினை செலுத்தி மாற்றத்திற்கு வழி வகுத்தார்கள் அதுதான் இன்றைய தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கிறது!




 

கருத்துகள் இல்லை