Breaking News

மாப்பிள்ளை அவர்தான் ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது! விஜயை கலாய்த்தாரா ஸ்டாலின்?

 ஆட்சியைப் பிடிக்க முடியாமல் திண்டாடும் விஜய்!

இணையதளத்தில் இப்போது ஒரு வீடியோ ஒன்று பயங்கர வைரல் ஆகிறது. மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய ஒரு வீடியோ. ஆனால் இப்போதைய சூழ்நிலைக்கும் ஏற்றவாறு அந்த வீடியோ இருக்கிறது. 108 இடங்களில் வென்றும் விஜய் அவர்களால் ஆட்சி அமைக்க முடியாமல் திண்டாடிக் கொண்டுள்ளார். இந்த நேரத்தில் திமுகவின் கூட்டணி கட்சிகள் விஜய் கட்சிக்கு ஆதரவு கொடுத்து விஜய் ஆட்சியைப் பிடிக்க முயன்று கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் இணையத்தில் ஒரு மீன் வைரலானது அதாவது படையப்பா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் காமெடி காட்சி ஒன்று வரும். தலைவர் ரஜினியும் செந்திலும் பொண்ணு பார்க்கப் போகும்போது, மாப்பிள்ளை இவர்தான் ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொல்வார் இல்லையா? அதே டயலாக்கை சில தினங்களுக்கு முன்பு முக ஸ்டாலின் அவர்கள் பேசியுள்ளார்.

தலைவர் ரஜினியின் டயலாக் பேசி விஜய்யை கலாய்த்த மு க ஸ்டாலின்!

அதாவது தேர்தல் பிரச்சாரத்தின் போது மாப்பிள்ளை இவர்தான் ஆனால் அவர் போட்டு இருக்கும் சட்டை என்னுடையது என்று நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள படத்தில் ஒரு காமெடி வருமே அது போல் உள்ளது என்று மு க ஸ்டாலின் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அந்த வீடியோவை இப்போது மக்கள் மத்தியில் கொண்டு போய் வைரஸ் செய்து கொண்டுள்ளனர் இணைய வாசிகள். ஏனென்றால் இப்போது விஜய்க்கு கிடைத்திருக்கும் அந்த ஆதரவானது திமுக தயவால் திமுகவின் கூட்டணி கட்சியால் கிடைத்த ஆதரவு என்பதால், மாப்பிள்ளை அவர்தான் ஆனால் சட்டை மு க ஸ்டாலின் அவர்களுடையது என்று இப்போது இணையத்தில் பலரும் பேசி வருகின்றனர். ஆட்சி அமைப்பதற்கு இவ்வளவு போராடும் விஜய் ஆட்சி அமைத்த பிறகு அந்த ஆட்சியை கவிழாமல் பாதுகாப்பாரா? அல்லது மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பாரா? என்று இப்போதே பல பேர் பேச ஆரம்பித்து விட்டார்கள். என்ன செய்யப் போகிறார் விஜய் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது பற்றிய உங்களுடைய கருத்தை மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள் முடிந்தால் இந்த பதிவை ஒரு ஷேர் செய்யுங்கள்! நன்றி!

     


கருத்துகள் இல்லை