Breaking News

தலைவர் ரஜினியின் இந்த அரசியல் எல்லாம் 2கே கிட்ஸ்க்கு தெரியாது!

 

தலைவர் ரஜினிக்கு முதல்வர் பதவி மீதோ, நாற்காலி அதிகாரத்தின் மீதோ எப்பொழுதும் ஆசை இருந்தது இல்லை என்பதை ஏன் நாம் திரும்பத் திரும்ப ஆணித்தரமாக சொல்கிறோம்?

**1996 தேர்தல் Vs 2026 தேர்தல் - காலம் ஒரு சக்கரம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்!**

சரியாக 30 ஆண்டுகள் கழித்து, 1996இல் நடந்தது போலவே 2026லும் ஒரு அரசியல் சூழல் அமைந்திருக்கிறது. ஆனால், அன்று இருந்த மனிதர்களின் முடிவுகள் வேறு, இன்று இருப்பவர்களின் முடிவுகள் வேறு!

**அன்று இருந்த சர்வாதிகார சூழல் (1991 - 1996):**

1991 இல் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு, அசுர பலத்துடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தலைமையில் அதிமுக அரியணை ஏறியது. மக்களின் அனுதாப அலையும், திமுக மீதுள்ள கோபமும் அதிமுக சுலபமாக வெல்ல வழி வகுத்தது. பின்னர் ஐந்து ஆண்டுகள் நடந்த அந்த ஆட்சியில் ஏற்பட்ட அவலங்களையும் கொடுமைகளையும், சர்வாதிகாரத்தால் மக்கள் பட்ட துன்பங்களையும் யாரும் மறந்திருக்க முடியாது.

இன்று 2026 இல் இருப்பது போல அவ்வளவு எளிதாக அன்று ஆளும் கட்சியையோ, ஜெயலலிதாவையோ விமர்சித்து விட்டு தமிழ்நாட்டில் யாரும் சுலபமாக நடமாட முடியாது. பொதுமக்கள், ஊடகங்கள் ஏன்... பெரிய அரசியல் கட்சித் தலைவர்களுமே வார்த்தைகளை மிகவும் ஜாக்கிரதையாகத்தான் பிரயோகித்தனர். யாராவது எதிர்த்து பேசினாலே அவர்களுக்கு எதிராக அராஜகம் கட்டவிழ்த்து விடப்படும். இன்று இருப்பது போல் அன்று சோசியல் மீடியாவோ, யூடியூபோ கிடையாது. யாராவது பாதிக்கப்பட்டாலும் அந்த செய்திகள் அவ்வளவு எளிதாக வெளியே வராது. பயம் சூழ்ந்திருந்த காலம் அது!

**"ராக்கி பாய்" போல கர்ஜித்த ஒற்றைச் சிங்கம்:**

அந்த காலகட்டத்தில், தமிழ்நாட்டில் தன்னந்தனியாக... யாருடைய துணையும் இல்லாமல் ஆளும் ஆட்சிக்கு எதிராக சிங்கமாக கர்ஜித்த ஒரே தலைவர் ரஜினிகாந்த் மட்டும்தான்! அதுவரை பயந்து கிடந்த பொதுமக்களும், ஊடகங்களும், சில அரசியல் கட்சிகளும் 'கே ஜி எஃப்' படத்தில் "ராக்கி பாய்" பின் கூடி நின்ற மக்களைப் போல், தலைவர் ரஜினிகாந்த் பின்னால் ஒன்று கூடி நின்றனர்.

1996 இல் தமிழக சட்டமன்றத் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் ஒன்றாக நடைபெற்றது. இப்படி ஒரு கொடுங்கோல் ஆட்சியை தமிழகம் கண்டதில்லை என்பதால் அதை கடுமையாக விமர்சித்த மூப்பனார் அவர்கள், பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ், அதிமுக உடனான கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

**தேடி வந்த முதலமைச்சர் நாற்காலி!**

இந்த சமயத்தில் தலைவர் ரஜினிகாந்த் அவர்களும், காங்கிரஸ் - அதிமுகவுடன் கூட்டணி அமைக்க கூடாது என்று வலியுறுத்தி பிரதமர் நரசிம்ம ராவை டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமர் நரசிம்ம ராவ் தலைவர் ரஜினிக்கு ஒரு பிரம்மாண்ட வாய்ப்பை வைத்தார்:

*"காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணியை விட்டு வெளியே வரத் தயார். ஆனால், அதற்கு தலைவர் ரஜினிகாந்த் புதிய கட்சி ஆரம்பித்து முதலமைச்சர் வேட்பாளராக நிற்க வேண்டும். காங்கிரஸ் உங்கள் பின்னால் நின்று கூட்டணி அமைக்கும், டெல்லி தலைமை உங்களுக்கு முழு ஆதரவையும் அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கும்"* என்று வாக்குறுதி அளித்தார்.

வெற்றி நிச்சயம், முதலமைச்சர் நாற்காலி கையில்... எந்த ஒரு சாதாரண மனிதனாக இருந்தாலும் இந்த வாய்ப்பை அள்ளி அணைத்திருப்பான். ஆனால், பதவி மீது சிறிதும் ஆசையில்லாத தலைவர் ரஜினிகாந்த், அந்தப் பொன்னான வாய்ப்பை அசாத்தியமாக நிராகரித்தார்! தனக்கு பதவி வேண்டாம் என்று கூறிவிட்டு, அதிமுகவை வீழ்த்த திமுகவுடன் கூட்டணி சேருமாறு இந்திய காங்கிரசுக்கு கோரிக்கை வைத்தார்.

ஆனால் காங்கிரஸ் தேசிய தலைமை கேட்காமல் ஜெயலலிதாவுடன் கூட்டணியை தொடர்ந்தது. இதுவே மூப்பனார் அவர்கள் காங்கிரஸில் இருந்து பிரிந்து, 'தமிழ் மாநில காங்கிரஸ்' என்ற தனி ஒரு கட்சியை ஆரம்பிக்க உந்துதலாக இருந்தது.

**1996 திமுக Vs 2026 அதிமுக:**

மறுபுறம் அன்று திமுகவில் உட்கட்சி பூசல் வெடித்து, அதில் பாதிக்கப்பட்டிருந்த வைகோ அவர்கள், கட்சியை விட்டு பிரிந்து வந்து 'மதிமுக'வை உருவாக்கியிருந்தார். ஏறத்தாழ இன்று 2026 இல் அதிமுக சந்திக்கும் அதே பிளவுபட்ட, பலவீனமான சூழலைத்தான் அன்று திமுக சந்தித்திருந்தது. அதிமுக மேல் மக்களுக்கு கடும் வெறுப்பு இருந்தாலும், பலவீனமாக இருந்த திமுகவை மக்கள் உடனடியாக நம்பத் தயாராக இல்லை.

அதாவது, இன்று 2026 இல் திமுக ஒரு வலிமையான ஆளுங்கட்சியாக இருப்பது போல, அன்று 1996 இல் அதிமுக ஒரு வலிமை மிகுந்த, ஆனால் மக்கள் வெறுப்பை சம்பாதித்த கட்சியாக இருந்தது. அதேபோல, அன்று எதிரே இருந்த திமுக, பிளவு பட்டு சக்தி இன்றி... இன்று 2026 இல் இருக்கும் அதிமுகவை போல் பொலிவிழந்த கட்சியாக இருந்தது.

திமுகவை அன்று யாரும் அதிமுகவிற்கு மாற்று சக்தியாக பார்க்கவில்லை. அதிமுகவை எதிர்த்து அன்று யார் துணிந்து நின்று இருந்தாலும் அவர்தான் முதலமைச்சர்! அதுமட்டுமா? இன்று அரசியல் தலைவர்களுக்கு இருப்பது போல், தலைவர் ரஜினிகாந்திற்கு எதிராக அன்று ஒரு பர்சன்ட் எதிர்ப்பு கூட கிடையாது. அவர் சொல்வதே வேதவாக்கு, அவரே மகான்! தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் பாகுபாடின்றி அவரது ரசிகர்களாக இருந்தனர்; அவரை கடவுளாகவே பார்த்தனர். அவரது ரசிகர்களும் அன்றைய காலகட்டங்களில் அசாத்தியமான முரட்டுத்தனத்துடன் இருந்தனர். அந்த விசுவாசத்தை இப்பொழுது இருக்கும் சோசியல் மீடியா ரசிகர்கள் எண்ணி கூட பார்க்க முடியாது.

தலைவர் ரஜினிகாந்த் மட்டும் அன்று முதலமைச்சர் வேட்பாளராக நின்றிருந்தால், அவரை ஆதரிக்க மூப்பனாரின் தமாகா, வைகோவின் மதிமுக, பிரதமர் நரசிம்ம ராவின் இந்திய காங்கிரஸ் என அனைத்தும் தயாராக இருந்தன. ஒட்டுமொத்த தமிழகமும் அவர் பின்னே திரண்டு நிற்க ஆவலாக இருந்தது.

**முடிசூடா மன்னன்:**

வெற்றி அவ்வளவு எளிதாக கண்ணில் தெரிந்தும், தனக்கு முதலமைச்சர் பதவி மீது ஆசை கிடையாது, அது தன் வழியும் இல்லை என்று கூறி, திமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் இரண்டையும் கூட்டணி அமைக்குமாறு வழிநடத்தினார் தலைவர். மிஞ்சி போனால் இரண்டு அல்லது மூன்று பத்திரிக்கை பேட்டிகளையும், ஒரே ஒரு தொலைக்காட்சி அறிக்கையையும் தான் கொடுத்திருப்பார் (திராவிட மண்ணில் அதுதான் முதல் வாய்ஸ்!).

விளைவு? திமுக - தமாகா கூட்டணிக்கு வரலாறு காணாத அசுர வெற்றி கிடைத்தது! அதுவரை அசைக்க முடியாத சக்தியாக பார்க்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா அவர்களே பர்கூர் தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வியை தழுவினார்.

**2026 இன் நிதர்சனம் - அவரே என்றும் கிங் மேக்கர்!**
இன்று 2026 தேர்தலிலும் அதே போன்ற ஒரு அரசியல் வெற்றிடமும், சூழலும் நிலவியது. ஆனால், சுற்றிலும் பாருங்கள்...

இங்கே கொள்கை, கோட்பாடு எதையும் பாராமல், எப்படியாவது வெற்றியைப் பெற்று அதிகாரத்திற்கு வந்துவிட வேண்டும், அந்த முதல்வர் நாற்காலியில் அமர்ந்து விட வேண்டும் என்று ஓடி ஓடி தேர்தலுக்குப் பின்னும் கூட்டணி வைப்பவர்களையும், மக்களை திசை திருப்புபவர்களையும் தான் பார்க்க முடிகிறது. பதவிக்காக அலையும் கூட்டம் ஒருபுறம்...

ஆனால், அன்று தேடி வந்த அரியணையையே "எனக்கு வேண்டாம், மக்களுக்கு நல்லது நடந்தால் போதும்" என்று தூக்கி எறிந்தவர் நம் தலைவர். 30 ஆண்டுகள் கடந்தும் தமிழ்நாட்டு அரசியலில் அவரே என்றும் முடிசூடா மன்னன்... அதிகாரமில்லா பேராற்றல்... எங்களின் நிரந்தர கிங் மேக்கர்! 🤘🔥

Tamil nesan✍️

#ThalaivarRajinikanth  # #TamilNaduPolitics

கருத்துகள் இல்லை