விஜய், அஜித், கமல் யாருக்கும் செட்டாகாது ஆனால் தலைவர் ரஜினிக்கு மட்டும்தான் செட்டாகும்
சாதாரணமா ஒரு போட்டோ எடுக்க முகத்தை கொஞ்சம் கேமரா பக்கம் திருப்புப்பா. மேல பாக்காத. சிரிச்சமாறி இருனு பெரிய போராட்டத்துக்கு பின்னால ஒரு போட்டோ அமையறதே குதிரை கொம்பா இருக்கு. ஆனா ஒரு சிலருக்கு இந்த மெனக்கெடல் எதுவும் இல்லாம இயல்பாவே போட்டோ ரொம்ப நேச்சுரலா அமையும்.
அவங்களை போட்டோ ஜெனிக் ஃபேஷ் னு சொல்லுவாங்க. அவங்களை விட அரிதா ஒரு சில தெய்வ பிறவிங்க இருப்பாங்க. எல்லா வகையான டிரஸும் அவங்களுக்கு செட் ஆகும். பார்ட்டி கேஷுவல் டிரெட்டிஷ்னல் னு.
நம்ம சினிமால போன தலைமுறைல காஸ்டியூம் க்கு முக்கியதுவம் கொடுத்தது கமல் மட்டும் தான். ஆனா வெற்றிவிழா விக்ரம் வேட்டையாடு விளையாடு போல ரொம்ப சில படங்கள் தான்அவருக்கு ஸ்டைலிஸா அமைஞ்சது. மத்தபடி கேரக்டருக்கான காஸ்டியூம் தான் யூஸ் பண்ணுவார்.
அடுத்து கார்த்திக் அவருக்கு ஃபார்மல் வேர்ஸ் தான் செம்மையா செட் ஆகும். அந்த தலைமுறைல டிரஸ்ல நிறைய டிரை பண்ணது பிரபு தான். அவரோட பெரிய உடல் வாகுல கூட நிறைய ப்ளைன்ல டிசைனிங், எம்ப்ராயிட்ரரி ஒர்க் சர்ட்ஸ் டிரை பண்ணுவாரு. அவ்ளோ அழகா இருக்கும். அவரோட நிறைய வேர்ஸ் டிரெண்டிங் சேல்ஸ் ஆகி இருக்கு.
அதற்க்கு அடுத்து வந்த தலைமுறைல பிரசாந்த் விஜய் அஜித் விக்ரம் சூர்யா சிம்புனு மொத்த பேருமே அவங்களுக்கு மேட்ச் ஆகும் டிரஸஸ் யூஸ் பண்ண ஆரமிச்சாங்க. அதுல விஜயோட நிறைய வேர்ஸ் மட்டும் இல்லாம ஒரு சில மெத்தேட் ஆஃப் டிரெஸ்ஸிங்கே டிரெண்டிங்ல இருந்திருக்கு.
ஆனா இந்த எல்லார் காலத்துலயும் இவங்களுக்கு அப்பன் ஒருத்தன் இருந்தாரு. பார்க்க ஹீரோக்கான லுக்கே இருக்காது. மோசமான வில்லன் ரோல்ல கூட ஃபார்மல் வேர்ஸ் இன்சர்ட் பண்ணிட்டு வருவாரு. கோட் சூட் போட்டிருப்பாரு. ரொம்பவே அப்பாவி நல்லவன் கேரக்டர் பண்ணும் போது சர்ட்ல முதல் ரெண்டு பட்டன் போடாம. ஃபுல் ஷிலிவ் சரியா மடிக்காம கூட வருவாரு.
ஆனா கடைசியா வந்த கூலி ஓப்பனிங் சாங்ல அவர் போட்டிருந்த லைட் ப்ளூ டெனீம் சர்ட் வரைக்குமே டிரெண்டிங்ல இருந்திருக்கு. எல்லா ஹீரோக்களுமே போட்டோ ஜெனிக் லுக்ல இருக்கறவங்க தான். ஆனா இவங்க எல்லோரையும் விட ஒரு விசயம் இவரிடம் கூடுதலா இருக்கும்.
நிறைய உதாரணங்களை சொல்ல முடியும். தர்மத்தின் தலைவன் இரண்டாம் பாதில வரும் ரஜினி கேரக்டர் டிரஸ்ஸிங்கை மேலே சொன்ன ஹீரோங்க யாருக்குமே கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாது. அப்பறம் பாண்டியன்ல அன்பே நீ என்ன சாங் மட்டும் பார்த்தாலே நான் சொன்ன அந்த விசயம் புரியும்.
டிசைனர்ஸ் வெச்சி தனக்கு பொருத்தமான டிரஸ்ஸிங்கை மட்டும் யூஸ் பண்ணும் ஹீரோக்களை விட எந்த டிரஸ்ஸிங் கையும் தனக்கு மேட்ச் பண்ணிக்கறது னு ஒரு விசயம் இருக்கு. அதுல என் தலைவன் மாஸ்டர். 🔥🔥🔥
Mohan Prabhu ✍️
#FirstLook #RajiniStyle

கருத்துகள் இல்லை