நடு ரோட்டில் டிரெஸ் மாற்றிய தலைவர் ரஜினிகாந்த்! எனக்கு ஷாக் ஆகிவிட்டது!
நடுரோட்டில் ட்ரெஸ் மாற்றிய தலைவர் ரஜினிகாந்த்..அதிர்ச்சியாக இருந்தது.. நடிகர் போஸ் கூறிய சம்பவம்..
ரஜினி கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக நடித்துவருகிறார். எத்தனை இளம் ஹீரோக்கள் வந்தாலும் அவர்களுக்கும் சரியான போட்டியை கொடுத்துக்கொண்டிருக்கிறார். இத்தனை வெற்றிகளுக்கும் ஒரே காரணம் அவரது டெடிகேஷன் மட்டும்தான்
ரஜினிகாந்த் தோல்விகளையே சந்திக்காதவரா என்றால் அதெல்லாம் இல்லை. ஆனால் அந்த தோல்விகளிலிருந்து மிக விரைவாகவே மீண்டு விடும் வல்லமை படைத்தவர் அவர். பாபா தோல்வியடைந்தபோது இனிமேல் ரஜினி அவ்வளவுதான் என்றார்கள்; அடுத்து அவர் நடித்த சந்திரமுகி திரைப்படம் மெகா ஹிட்டடித்தது. தர்பார், அண்ணாத்த தோல்வியடைந்தபோது இனி ரஜினி கரியர் காலி என்றார்கள்; அடுத்து அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது...
சிவாஜி படத்திற்காகத்தான் நான் வாய்ப்பு தேடி அலைந்தேன். படத்தில் நடித்தபோது ஒருமுறை காஸ்ட்யூம் மாற்றிக்கொள்ளுங்கள் என பொது இடத்தில் வைத்து கொடுத்தார்கள். உடை மாற்றிக்கொள்வதற்கு எந்த மறைவான இடமும் இல்லை...உடனே நான் அந்த காஸ்ட்யூமரிடம், என்ன சார் நீங்கள் ஏதாவது மறைவாக ஒரு இடம் கொடுங்கள் என கேட்டேன். அதற்கு அவரோ, 'சார் சார் ஷாட் எடுக்குறாங்க சார் மாற்றிக்கொள்ளுங்கள் சார்' என சொன்னார். பின்னால் திரும்பி பார்த்தால் பப்ளிக்கில் ரஜினி சார் பேண்ட்டை கழற்றி மாற்றிக்கொண்டிருந்தார். என்னை செருப்பால் அடித்தது மாதிரி இருந்தது....

கருத்துகள் இல்லை