யாருக்கு பொறாமை? தலைவர் ரஜினியின் தீவிர ரசிகை கொடுத்த தரமான பதிலடி!
தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற உடனேயே வாழ்த்து சொல்லி விட்டார் தலைவர்.
ஆனால் அதற்கு நன்றி கூட தெரிவிக்கவில்லை விஜய். நிறுத்தி நிதானமாக எல்லோருக்கும் சொல்லி விட்டு கடைசியாக 10-ம் தேதி நன்றி சொல்லியிருக்கிறார். இதை யாரும் ஏன் என்று கேட்கவில்லை. அட. அதை விடுங்கள். முதலமைச்சர். கூட்டணி பேரமெல்லாம் பேசி முடிக்க வேண்டிய சூழல். அதனால் இல்லை.
அதற்கு முன்பு ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானதற்கு எதிராக ட்விட் போட்டாரே. அதற்கு சம்பிரதாயத்திற்காக ஒரு நன்றி சொன்னாரா நடிகர் விஜய்? அப்போ தேர்தலெல்லாம் முடிந்து சும்மாதானே பனையூரில் இருந்திருப்பார்?
சரி.. அதையும் விடுங்கள். தேர்தல் முடிவை எதிர்பார்த்து டென்ஷன். ஜனநாயகன் வராததால் டென்ஷன்.
அதற்கு முன்பு எந்த விஷயத்தில் அவர் நன்றியோ, வாழ்த்தோ யாருக்குச் சொல்லியிருக்கிறார்?
தேர்தலில் ஜெயித்த பிறகு பிற கட்சித் தலைவர்களைப் பார்க்கச் சென்றிருக்கிறார். பாராட்டுகள். திரைத்துறையில் இருந்த போது அதே போல யாரைப் போய்ப் பார்த்திருக்கிறார்? யாரைப் பாராட்டியிருக்கிறார்?
தலைவர் தாதா சாஹேப் பால்கே விருது வாங்கிய போது எதுவும் வாழ்த்துச் சொன்னாரா? அவரது ஐம்பதாவது வருடப் பொன் விழாவை முன்னிட்டு வாழ்த்து சொன்னாரா? சரி.. தலைவருக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டாம். வேறு யாருக்கு, எப்போது வாழ்த்து சொல்லியிருக்கிறார் விஜய்?
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கொடநாடு போய் விட்டு வந்து கை கட்டி நின்று பேசினார் என்று இப்போதும் புலம்புகிறார்கள். அவருக்கு வேலை ஆக வேண்டும் என்றுதானே சென்றார்? அப்போது சென்று விட்டு இப்போது எதற்கு வீராப்புப் பேச்சு?
ஆளுங்கட்சி என்றால் ரஜினி வளைந்துக் கொடுப்பார் என்று பத்திரிகையாளர் போர்வையில் சில அறிவிலிகள் உளறிக் கொண்டிருக்கின்றனர். 1991-96 காலக்கட்டத்தில் அதிமுகதான் ஆளுங்கட்சி. சர்வ வல்லமை படைத்த முதலமைச்சராக ஜெ அம்மையார் ஆண்ட போது திமுவே கூட எதிர்த்துக் குரல் கொடுக்காமல் பம்மியிருந்தது. தொடர்ந்து ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் தலைவர்தான்.
அடுத்து கருணாநிதி ஆட்சிக்காலத்தில் என்னதான் கருணாநிதி நெருங்கிய நட்புடன் இருந்தாலும், மேடையில் அஜீத் பேசியதற்கு சடாரென உடனடியாக எழுந்து ஆதரவு தெரிவித்து கை தட்டினார் தலைவர். அதுதான் ஆளுங்கட்சிக்குச் சார்பாக நடப்பதா?
திமுக ஆட்சிக் காலத்தில் அதிமுகவினருடன் கூட நட்பு பாராட்டுவதும், அதிமுகவின் ஆட்சிக் காலத்தில் திமுகவினருடன் நட்பு பாராட்டுவதும் அவருடைய இயல்பு.
ஆனால் அவரின் சிஷ்யன் என்று சொல்லி வளர்ந்த விஜய், லிங்கா பிரச்னையின் போது படம் வெளியான மறுநாளே படம் படு தோல்வி என்று புரளி கிளப்பிய சிங்காரவேலன் என்ற நபரைக் கூப்பிட்டு வைத்து புகைப்படம் எடுத்ததெல்லாம் என்ன மாதிரியான செயல்? அந்த நபர் அதன் பிறகு திரைத்துறையிலேயே பல வழக்குகளில் சிக்கி இருப்பதாக செய்திகளும் தொடர்ந்து வந்தன. அதே நபர் இப்போது தவெகவில் இணைந்து தானே பட்டுக்கோட்டை வேட்பாளர் என்றெல்லாம் செய்தி பரப்பி வந்தது அனைவருக்கும் தெரிந்ததுதானே? அவருக்கு சீட் கொடுக்கவில்லை. கொடுத்திருந்திருந்தால் பல் இளித்திருக்கும் அவர் பவிசு!
இதெல்லாம் என்ன மாதிரியான செயல்?
எடப்பாடி பழனிசாமியைப் பார்க்காமல், அவர்கள் அதிருப்தி அணியில் குதிரை பேரம் நடந்து கொண்டிருப்பதாகப் பேச்சு நடக்கும் போது அவர்களைச் சென்று பார்ப்பதுதான் நாகரிக அரசியலா? அந்தச் செய்தி வெளி வராமல் இருக்கத்தான் சமூக ஊடக மற்றும் ஊடக மாஃபியாவை வைத்து தலைவர் வாழ்த்து சொல்லவில்லை என்று பொய்த் தகவல் பரப்பப்பட்டதா? இன்னமும் அதற்குத்தான் அப்படிப் பரப்புகிறீர்களா?
ஆனால் இதில் இன்னொன்றும் சொல்ல வேண்டும். தேர்தலுக்கு முன்பும் சரி, தேர்தலுக்குப் பின்பும் சரி.. திமுகவுடன் தலைவருக்குத் தொடர்பு என்றெல்லாம் திட்டமிட்டு கிளப்பப்படும் புரளிகளுக்கும், பொய் குற்றச்சாட்டுகளுக்கும் திமுக தரப்பில் இருந்து பலமான எதிர்ப்பு எதையுமே சொல்லக் காணோம். தலைவர் மட்டும்தான் தோற்றுப் போயிருக்கிறார் நண்பர் என்று பாவம் பார்த்து பார்க்கச் சென்று அதிலும் மக்களிடம் கெட்ட பெயரைத் திட்டமிட்டு பரப்பியிருக்கிறார்கள்.
இப்போதும் கூட தெள்ளத் தெளிவாக, தொடர்ந்து பொய்யே சொல்லிக் கொண்டிருந்தால் இந்த விளக்கம் என்று தலைவர் சொல்லியும், “விஜய் மேல் பொறாமை. விஜய் மேல் பயம். அதான் தன்னிலை விளக்கம் சொல்கிறார்” என்று உருட்டிக் கொண்டிருக்கின்றனர் அயோக்கியர்கள்.
அவர் என்றைக்கு ஊடகத்தினரைச் சந்திக்காமல் இருந்திருக்கிறார்? அவர் என்றைக்கு மனதில் பட்டதைப் பேசாமல் இருந்திருக்கிறார்? அவர் என்றைக்கு யார் மீது பொறாமைப் பட்டிருக்கிறார்?
உங்கள் போதைக்கு அவரை ஊறுகாயாக நினைக்காதீர்கள் கேவலப் பிறவிகளே.
பழிக்கவும் ரஜினி, பிழைக்கவும் ரஜினி என்பது பன்னெடுங்காலமாக பலருக்கும் வாழ்வளித்துக் கொண்டு இருக்கிறது என்பது உண்மையே!

கருத்துகள் இல்லை