சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டைரக்ஷனில் நான்! சத்யராஜ் கொடுத்த அதிரடி பேட்டி
நடிகர் சத்யராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினியை பற்றி பல மேடைகளில் பல இடங்களில் பேசியிருக்கிறார். என்றாலும் இந்த பத்திரிக்கை பேட்டியில் பேசிய விஷயங்கள் கண்டிப்பாக தலைவர் ரஜினியின் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை ஏனென்றால் தலைவர் ரஜினியை சத்தியராஜ் நிறைய இடங்களில் விமர்சித்துப் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த பேட்டியில் தலைவரை பற்றி நிறைய விஷயங்கள் பாசிட்டிவாக பேசியிருக்கிறார்.
ரஜினியிடம் உள்ள இன்னொரு மிகப் பெரிய நல்ல குணம் என்னவென்றால், முன்பெல்லாம் ஹீரோக்கள் என்ன செய்வார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதாவது வில்லனுக்கு அதிக வசனம் பேசுவது போல் காட்சிகள் இருந்தால், அதை நீக்க சொல்லி விடுவார்களாம். ஏனென்றால் இவர்களுக்குத்தான் அதிக வசனம் இருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் இவர்களை ரசித்துப் பார்ப்பார்கள் என்று அப்போதைய ஹீரோக்கள் எண்ணியிருக்கிறார்கள்.
ஆனால் இதற்கு நேர் மாறாக சூப்பர்ஸ்டார் என்ன செய்கிறார் என்றால், வில்லன்களுக்கு வசனம் கம்மியாக இருக்கும் பட்சத்தில் ஏன் அவர்களுக்கு வசனம் கம்மியாக இருக்கிறது? இன்னும் ஒரு இரண்டு நான்கு வரி எழுதுங்கள் அப்போதுதான் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் சமமான முக்கியத்துவம் இருக்கும். அதை தான் மக்கள் ரசித்துப் பார்ப்பார்கள் என்று ரஜினி சொல்கிறார். இதுதான் தலைவருக்கும் மற்ற நடிகர்களுக்கும் உள்ள வித்தியாசம்.
சினிமாவில் இவ்வளவு விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ஒரு படம் இயக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் விருப்பம். அது மட்டுமல்லாமல் அந்த படத்தில் நான் தான் நடிக்க வேண்டும் என்பதும் என்னுடைய கனவு. அது நடக்குமா என்று தெரியவில்லை. நடந்தால் மிகவும் சந்தோஷப்படுவேன்.
சினிமாவில் நிறைய மூட நம்பிக்கைகள் உண்டு அது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே நிறைய இருக்கிறது. அதில் ஒரு சில விஷயங்களை உடைத்த மாபெரும் பங்கு சூப்பர் ஸ்டாருக்கு இருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் ஒரு நடிகன் வில்லனாக அறிமுகமானால் கடைசி வரை வில்லனாகவே இருந்து ஹீரோவிடம் உதை வாங்கியே அவர் ரிட்டயர் ஆக வேண்டும். அதேபோல் ஒரு நடிகன் காமெடியானாக அறிமுகமானால் கடைசி வரை காமெடி செய்து மக்களை சிரிக்க வைத்து விட்டு அப்படியே செல்ல வேண்டியது தான். எந்த கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆகிறார்கள் கடைசி வரை அதே கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் அன்றைய காலகட்டத்தில் இருந்த ஒரு முக்கியமான கருத்து. அதனை உடைத்தெறிந்தவர் சூப்பர் ஸ்டார்.
ரஜினி வில்லனாக, குணச்சித்திர நடிகராக, பிறகு ஸ்டைல் மன்னனாக, ஹீரோவாக இப்படி பல்வேறு பரிணாமங்களில் அவர் வளர்ச்சி பெற்று இருக்கிறார். அவரால்தான் இன்று நிறைய பேர் வில்லனாக நடித்தாலும் ஹீரோவாகவும் நடிக்கிறார்கள். என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். நானும் வில்லனாக இருந்து ஹீரோவாக மாறியவன் தான். அதைப்போல் கருப்பாக இருப்பவர்கள் சினிமாவில் நுழைய முடியாது என்ற ஒரு கருத்தையும் உடைத்து எறிந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினியே. அவருடைய பாதையே என்றும் தனி பாதை தான்.
அதுபோல இன்னொரு விஷயம் அவரைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். முன்பெல்லாம் ஒரு படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது என்றால் மக்கள் என்ன கேள்வி கேட்பார்கள் என்றால், யார் ஹீரோ? யாரு ஹீரோயின்? யாரு காமெடியன்? இப்படி இந்த கேள்வி எல்லாம் கேட்பாங்க. ஆனால் சூப்பர் ஸ்டார் சினிமாவுக்கு வந்த பிறகு இந்த கேள்வி அனைத்தையும் விட்டுட்டாங்க. யார் படம் ரஜினி படமா ஓகே படம் நல்லா இருக்கோ நல்லா இல்லையோ? அந்த படத்தை போய் பார்க்கணும் இதுதான் மக்களோட மனநிலை. ரஜினி படம் என்றால் தியேட்டருக்கு தானாக கூட்டம் அலைமோதுகிறது.
இப்படி ஒரு பிரம்மாண்டமான சாதனையை ஒரு தனிமனிதனா ரஜினி பண்ணி இருக்கிறார் அப்படின்னு நினைக்கும்போது நமக்கெல்லாம் பிரம்மிப்பாக இருக்கிறது! அதேபோல ஒரு நடிகன் எப்படி எல்லாம் இருக்க வேண்டும், எப்படி எல்லாம் நடிக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு சூப்பர் ஸ்டார் தான். அவர் பல பேருக்கு முன்மாதிரியாக திகழ்கிறார். நாம் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறோம் என்றால் அது சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் கூட அதையும் மக்களிடத்தில் பேச வைக்க கூடிய சக்தி ரஜினியிடம் இருக்கிறது.
உதாரணமாக 16 வயதினிலே படத்தை எடுத்துக் கொள்ளலாம். அந்த படத்தில் ரஜினி வில்லன் தான். ஒரு சிறிய கதாபாத்திரத்திற்கு தான் வருகிறார், என்றாலும் கூட அந்த படத்தில் அவர் இது எப்படி இருக்கு என பேசும் வசனம் இன்று வரை பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதற்கு அவருடைய அந்த நடிப்பும் அந்த பாடி லாங்குவேஜும் ஒரு முக்கிய காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. அதை வேறொரு நடிகர் பேசியிருந்தால், அதுவும் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்த நடிகர் பேசி இருந்தால் அந்த அளவுக்கு ரீச் ஆயி இருக்குமா என்பதும் சந்தேகமே அந்த படத்தில் ரஜினி ஹீரோவுக்கு இணையாக பேசப்பட்டார். என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.
இப்படி தன்னுடைய கேரக்டர் சிறிய ரோலாக இருந்தாலும் அதனையும் மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாற்றும் சக்தி படைத்தவர் தான் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிகளை குவிக்க முடியும். அதனால்தான் சூப்பர் ஸ்டார் இவ்வளவு உயரத்தில் இன்றும் நம்பர் ஒன்னாக ஜொலித்துக் கொண்டே இருக்கிறார். ரஜினியிடம் எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு விஷயம் என்னவென்றால் உலகமே கொண்டாட கூடிய இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் ஆன பிறகும் கூட, அவருடைய அந்த எளிமை, எல்லோரையும் மதிக்கும் அந்த குணம், இது அனைத்தையும் நான் மிகவும் விரும்புகிறேன்.
உலகத்திலேயே இவ்வளவு எளிமையான இயல்பான ஒரு சூப்பர் ஸ்டாரை பார்ப்பது மிகவும் கடினம். கடினம் என்று சொல்வதை விட பார்க்கவே முடியாது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் உலகத்தில் ரஜினி ஒருவர் தான். அவரிடம் உள்ள இன்னொரு மிகப்பெரிய குணம் எல்லோருக்கும் உதவுவது அதுவும் யாருக்கும் தெரியாமல் யாரிடமும் சொல்லாமல் உதவி செய்வது வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்பது போல உதவி செய்வது. இது சூப்பர் ஸ்டாருக்கே உரித்தான அற்புத குணம்!

கருத்துகள் இல்லை