தலைவர் ரஜினியிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!
பலத்த எதிர்பார்ப்புடன் **படையப்பா** 1999-இல் வெளியானது. அந்தப் படம் இண்டஸ்ட்ரி ஹிட் ஆன பிறகு, நல்ல கதை அமையவில்லை என்று தலைவரே பலமுறை சொல்லி வந்து, மூன்று ஆண்டுகள் கழித்து 2002-இல் தொடங்கியது **பாபா** படப்பிடிப்பு. பாபா படம் சரியாகப் போகாததால், சத்தமே இல்லாமல் 2004-இல் தொடங்கியது **சந்திரமுகி** படப்பிடிப்பு.
ஆனால், இந்த இரண்டு படங்களுக்கும் தலைவர் ரஜினியுடைய மேக்கப்பில் வேண்டுமானால் வித்தியாசம் இருக்கலாமே தவிர, மனதளவில் தலைவர் ரஜினிகாந்த் ஒரே மாதிரியாகத்தான் இருப்பார். வெற்றி பெற்றுவிட்டோம் என்று அதிகம் ஆடியதும் இல்லை, வெற்றி பெறவில்லை என்று நொந்து போனதும் இல்லை.
வெற்றியையும் தோல்வியையும் கையாளும் விதம்!
* **வெற்றிக்குப் பிறகு:** ஒரு வெற்றி கிடைத்த பின், அதே உற்சாகத்துடன் அடுத்து இதை மிஞ்சும் அளவுக்கு வெற்றி தர வேண்டும் என்று உழைப்பார் சூப்பர் ஸ்டார்.
* **தோல்விக்குப் பிறகு:** வெற்றி பெறாமல் போனாலோ, எங்கே தவறு செய்தோம் என்று யோசித்து தனது நண்பர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பெரியவர்களிடம் ஆலோசனை பெற்று அந்த குறையை சரி செய்வார்.
அதனால்தான் இடையிடையே ஏதாவது ஒரு படங்கள் சறுக்கினாலும் கூட, அடுத்த படம் அவரை முன்பை விட இன்னும் ஒரு உச்சத்தில் போய் உட்கார வைக்கும்; புதிய சாதனையைப் படைக்கும். அன்று முதல் இன்று வரை இதுதான் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் வரலாறு, நிதர்சனமான உண்மையும் கூட.
நிம்மதியான வாழ்விற்கு ரஜினி காட்டும் வழி!
வெற்றி தோல்வி மாறி மாறி வரும், ஆனால் நிம்மதி என்பது நமது மனநிலை எப்படி என்பதைப் பொறுத்தது.
1. **கடமையைச் செய்:** கடமையைச் சரியாகச் செய்துவிட்டால் முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் அதை இறைவனிடம் விட்டுவிட்டு நாம் நிம்மதியாக இருக்கலாம்.
2. **சுயநலக் கூட்டங்களை தவிர்:** வெற்றி பெற்ற பிறகு நம்மைப் புகழ்ந்து பாட ஒரு திடீர் 'ஜால்ரா' கூட்டம் வரும் (தங்களின் சுய லாபத்திற்காக). அதேபோல, தோல்வி அடைந்த நேரத்தில் நம்மை இகழ்ந்து பேச ஒரு திடீர் 'வன்மக் கூட்டம்' வரும் (நம்மை முற்றிலும் நம்பிக்கையிழக்க வைத்து முடக்கி உட்கார வைக்க).
**முடிவுரை:**
இந்த இரண்டு கூட்டங்களையும் நாம் அருகில் நெருங்க விடாமல், அவர்களின் வார்த்தையைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், நாம் நமது கடமையைச் செய்து கொண்டு நமது வழியில் முன்னேறிச் சென்று கொண்டே இருக்க வேண்டும். இதுதான் தலைவர் ரஜினிகாந்த் அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.



கருத்துகள் இல்லை