Breaking News

சூப்பர் ஸ்டார் ரஜினி விவகாரத்தில் நக்கல் முதல் வருத்தம் வரை துரைமுருகன் செய்தது என்ன?


அமைச்சர் பதவி கிடைத்தது எப்படி?

2021-இல் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நேரம் அது. கண்டிப்பாக திமுக ஆட்சி தான் அமையப் போகிறது என்று உறுதியானது. அந்த நேரத்தில்
மு.க.ஸ்டாலின் அவர்களது இல்லத்தில் யார் யாருக்கெல்லாம் என்னென்ன பதவி வழங்குவது என்று திட்டமிட்டு கொண்டிருந்தனர். அமைச்சர் பதவி யாருக்கெல்லாம் வழங்குவது என்று பட்டியல் போட்டுக் கொண்டிருந்தனர். 

அந்தப் பட்டியலில் மிகவும் மூத்தவர் ஒருவர் இருந்தார். அவர் பலமுறை அமைச்சர் பொறுப்பு வகித்தவர். அதனால் அவருக்கு சபாநாயகர் பதவியை வழங்கிவிட்டு, இதுவரை பொறுப்பு வகிக்காத ஒரு புதியவர் ஒருவரை அமைச்சரவை பட்டியலில் வைத்திருந்தனர். ஆனால் இதனை எப்படியோ தெரிந்து கொண்ட அந்த மூத்தவர், நேராக ஸ்டாலினின் வீட்டுக்கே சென்று அவரது கையைப் பிடித்துக் கொண்டு அழுது புலம்புகிறார். 

தம்பி! இதுதான் எனக்கு கடைசி வாய்ப்பு. இதனை விட்டால் வேறு வழி இல்லை. இதுக்கு அப்புறம் நான் இருப்பேனா என்பது கூட தெரியாது. அதனால் எனக்கு இப்போது அமைச்சர் பதவி இல்லை என்றால் லோக்கல் கிளைச் செயலாளர்கள் கூட என்னை மதிக்க மாட்டார்கள். அதனால் கண்டிப்பாக எனக்கு ஒரு துறை ஒதுக்கியே ஆக வேண்டும். என்று கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். 

அமைச்சர் பட்டியலில் மாற்றம்!

முதல்வர் ஸ்டாலின் எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்தார். ஆனால் அந்த பெரியவர் அதை ஏற்கவே இல்லை. பிடிவாதம் பிடித்துக் கொண்டே இருந்தார். அதனால் வேறு வழியே இல்லாமல் தான் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த அமைச்சர் பட்டியலில் இருந்த அந்த புதியவர் பெயரை நீக்கி விட்டு, இந்த பெரியவர் பெயரை சேர்த்தார் மு க ஸ்டாலின். அந்தப் பட்டியலில் இருந்து நீக்கிய அந்த புதிய நபர் யார் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர் கருணாநிதியின் தீவிர பக்தர் தான் அவர்.

இதற்கு அடுத்ததாக, 2023-இல் சரியாக செயல்படாத அமைச்சர்களை இலாக்கா மாற்றம் செய்வது என்ற முடிவுக்கு வந்தார் முதலமைச்சர் ஸ்டாலின். கூடவே அமைச்சரவையிலும் சிறிய மாற்றங்கள் செய்ய முடிவு எடுத்தார். அந்த சமயத்தில் கழக முன்னோடிகளை அனுப்பி இந்த மூத்தவரிடம் இருக்கும் இரண்டு வளம் கொழிக்கும் இலாகாக்களில் ஒன்றை இன்னொருவருக்கு ஒப்படைக்கும்படி கேட்டுக் கொண்டார்.

ஆனால் அந்த கழக முன்னோடிகளிடம் முதலில் கோபமாக பேசிய அந்த பெரியவர், பிறகு கண்ணீர் சிந்தியும் சில விஷயங்களை எடுத்துக் கூறினார். இனி அறிவாலயம் பக்கமே வரமாட்டேன் என்று கூட சபதம் எடுத்தார். ஒரு வாரத்திற்கு வீட்டிலேயே படுத்தும் கொண்டார். இப்படி அடம் பிடித்து மீண்டும் பதவியை தக்க வைத்துக் கொண்டார்.

என்ன செய்வது குழம்பிய ஸ்டாலின்!

அந்த பெரியவர் தனது தந்தையான கலைஞர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் என்பதாலும், தன்னைவிட வயதில் பெரியவர் என்பதாலும் ஸ்டாலினுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. என்ன சொன்னாலும் புரிந்து கொள்ள மறுக்கிறாரே இவரை வைத்து என்ன செய்வது என்ற வருத்தத்தில், முதல்வர் இவரிடம் பேசுவதையே சில காலம் நிறுத்தி இருந்தார்.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மேடையில் பேசும்போது, கடந்த மூன்று ஆண்டுகளில் ஒருபோதும் இல்லாத வகையில் மு க ஸ்டாலின் மனம் விட்டு சிரித்தார். அது மட்டுமல்லாமல் தலைவரின் பேச்சை ஆமோதித்தும் பேசினார். இதையெல்லாம் பார்க்கும் போது, தன்னால் வெளிப்படையாக பேச முடியாமல் இருந்ததை ரஜினிகாந்த் உடைத்து பேசி விட்டாரே என்ற மகிழ்ச்சி தான் அவருக்கு.

அதுமட்டுமல்லாமல் அதற்கு அடுத்த நாள் கலைவாணர் அரங்கில் நடந்த மற்றும் ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதியும் கூட ரஜினிகாந்தின் பேச்சை மேற்கோள் காட்டி பேசினார். அவர் பேசியபோது, அது திமுக இளைஞரணி ஒட்டுமொத்த உணர்வுகளையும் பிரதிபலித்தது என்றே கூற வேண்டும். இப்படி எல்லாம் கையைப் பிடித்து, கதறி அழுது தனது சொந்த மாவட்டத்தின் கட்சியிலும் சரி ஆட்சியிலும் சரி மற்றவர்களை வளர விடாமல், பதவியில் செவிக்கால் போட்டு ஒட்டிக் கொண்டிருப்பவர் தான் அந்த மூத்தவர்.

அந்த மூத்தவர் யார் தெரியுமா?

அந்த மூத்தவர் யார் என்று இப்போது நான் கூற வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கே தெரிந்திருக்கும். அவர் வேறு யாரும் அல்ல துரைமுருகன் தான. கலைஞர் கருணாநிதியுடன் இத்தனை ஆண்டு காலம் அவர் பயணித்தும் அரசியலுக்கும் சினிமாவுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் இருக்கிறார் என்பது நமக்கு வருத்தமாக உள்ளது. 

சினிமா என்பதே வேறு அங்கு மார்க்கெட் இருக்கிற வரைக்கும் ஓடுகின்ற குதிரை மேலே பந்தயம் கட்ட தான் செய்வார்கள்.
வருடத்திற்கு தமிழ் சினிமாவை பொறுத்தவரை குறைந்தது 250 லிருந்து 300 படங்கள் வரையும் ரிலீஸ் ஆகிறது. அந்தந்த படங்களின் ஹீரோக்கள் அனைவருக்குமே மார்க்கெட் இருக்கிறது என்றால், அந்த அத்தனை படங்களுமே ஓடும் ஆனால் அதனை யாரும் தடுக்க முடியாது.

அரசியல் என்பது வேறு!

ஆனால் அரசியல் என்பது அப்படி அல்ல. முப்பது பேர் மட்டுமே அமைச்சராக முடியும். காட்பாடியில் ஒரு கட்சி சார்பில் ஒரே ஒருத்தர் மட்டும் தான் போட்டியிடவும் முடியும். வேலூர் எம்பி தொகுதியில் ஒருத்தர் மட்டும் தான் போட்டியிட முடியும். அப்படி இருக்கையில் அந்த ஒரு இடத்தையும் கூட 60 வருடமாக ஒரே ஒரு ஆள் பிடித்து வைத்திருந்தால்,
கட்சிக்காக உழைக்கும் மற்றவர்களோட நிலைமை என்ன?

ஆகவே கௌரவமாக கடந்து சென்று இருக்க வேண்டிய ஒரு பேச்சுக்கு பதில் அடி கொடுக்கிறேன் என்று மேலும் அசிங்கப்பட்டு கொண்டிருக்கிறார் காட்பாடியார்! சூப்பர் ஸ்டார் பற்றி வயதான நடிகர்கள் இன்னும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தாடி நரைத்து விட்டது. பல்லும் விழுந்து விட்டது. அப்படி இருந்தும் நடிக்கிறார்கள். அவர்களால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. என்று துரைமுருகன் ரஜினிக்கு பதிலடி கொடுத்துவிட்டு சென்றார்.

தலைவரின் மனசு யாருக்கு வரும்?

ஆனால் அடுத்த கனமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் துரைமுருகன் இப்படி பேசி இருக்கிறார் என்று கேட்டபோது, துரைமுருகன் என்ன வேண்டுமானாலும் பேசலாம் அவர் எனது நண்பர்தான்  அவருடன் என்னுடைய நட்பு எப்போதும் போல தொடரும். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று அவருக்கே உரித்தான பாணியில் பதில் சொல்லிவிட்டு சென்றார். மனதளவிலும் யாரையும் நோகடிக்க கூடாது என்று நினைக்க கூடியவர் தான் ரஜினிகாந்த.

இதற்கு அடுத்ததாக இன்னொரு சம்பவமும் கூட நடந்தது தலைவர் ரஜினிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் பேசியது தவறு தான். அதற்காக உங்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்று அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல், பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் கூட நாங்கள் நகைச்சுவைக்காக பேசியதை யாரும் பகைச்சுவையாக எடுத்துக் கொள்ள வேண்டாம். என்றும் கூறினார் துரைமுருகன்.

ஸ்டாலின் தான் காரணமாம்!

துரைமுருகன் தலைவர் ரஜினியிடம் வருத்தம் தெரிவித்ததற்கு முதல்வர் ஸ்டாலின் தான் காரணம் என சில செய்திகளும் வெளியானது. ஸ்டாலின் தான் ரஜினியிடம் பேசுங்கள் அவரிடம் வருத்தம் தெரிவியுங்கள் என்று கூறியுள்ளதாகவும், தகவல் வெளியானது. எது எப்படியோ மொத்தத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசிய விஷயங்கள்தான் இன்று வரை சமூக வலைதளங்களில் மிகவும் பேசுபொருளாக மாறியுள்ளது. தலைவரை தவிர வேறு யாரேனும் இந்த விஷயங்களை பேசி இருந்தால், கண்டிப்பாக இவ்வளவு பெரிய விவாதமாக மாறி இருக்காது.

தலைவரின் பேச்சுக்கு அவ்வளவு சக்தி உள்ளது என்பதே இதன் மூலம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்!

கருத்துகள் இல்லை