சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி அதிரடியாக பேசிய அமெரிக்க தூதர் மற்றும் அமெரிக்க நடிகர்!
உலகம் முழுவதும் ரஜினியின் புகழ்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புகழ் உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது என்பதை நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் உலக அளவில் தலைவர் ரஜினியை தெரியாத ஆட்களே இருக்க முடியாது. ரஜினியை பற்றி பேசாத பெரும் தலைகளே இல்லை என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
ஜப்பானில் தலைவருக்கென்று 500க்கும் மேற்பட்ட ரசிகர் மன்றங்கள் இயங்கி வருகிறது. தலைவர் படம் வெளியாகும் போதும் சரி, அல்லது ரஜினியின் பிறந்தநாள் என்றாலும் சரி தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் கொண்டாடுகிறார்களோ, அதே போல இன்னும் சொல்லப்போனால் அதைவிட ஒரு படி மேலே வெளிநாட்டில் உள்ள ரசிகர்கள் தலைவரை கொண்டாடுகிறார்கள். அதுவும் தலைவர் ரஜினியின் ரசிகர்கள் என்று நான் குறிப்பிடுவது வெளிநாட்டு வாழ் தமிழர்களை அல்ல. வெளிநாட்டவர்களை தான் சொல்கிறேன்.
ஏனென்றால் ஜப்பான் மக்களையும் தமிழ் பேச வைக்க முடியும் என்றால் அது ரஜினியால் மட்டுமே இயலும். அதே போல சிங்கப்பூர் மலேசியா சீனா ஆஸ்திரேலியா இங்கிலாந்து ஏன் இன்னும் சொல்லப்போனால் பாகிஸ்தானில் கூட சூப்பர் ஸ்டாருக்கு ரசிகர்கள் உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. மன்மோகன் சிங் இந்தியாவின் பிரதமராக இருந்தபோது ஜப்பான் நாடாளுமன்றத்தில் தலைவர் ரஜினியை பற்றி பேசி கைதட்டல் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அளவுக்கு உலகம் முழுவதும் ரஜினிகாந்த் அவர்களுக்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதனால் புகழுக்கு கொஞ்சமும் குறைவே இல்லாமல் தான் இன்றுவரையும் ரஜினி இருந்து வருகிறார்.
ரஜினி பற்றி அமெரிக்க தூதர்!
அந்த வகையில் மேலும் அவரது புகழை வான அளவுக்கு உயர்த்த இந்த நேரத்தில் ஒரு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது என்ன சம்பவம் என்று இப்போது பார்க்கலாம். முதலில் அமெரிக்க தூதர் சூப்பர் ஸ்டார் ரஜினியை பற்றி என்ன சொல்கிறார் என்பதை பார்த்துவிட்டு, அதன் பிறகு அமெரிக்க நடிகர் சூப்பர் ஸ்டாரை பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் தற்போது இந்தியா வருகை புரிந்துள்ளார். அவரிடம் சன் டிஜிட்டல் சேனலில் இருந்து ஒரு இன்டர்வியூ எடுக்கப்பட்டது. அந்த பேட்டியை எடுத்த அந்தப் பெண்மணி ஒரு கேள்வி ஒன்றைக் கேட்டார். நீங்க இப்போ இந்தியா வந்து இருக்கீங்க தமிழ்நாடு வந்து இருக்கீங்க தமிழ்நாடு அப்படின்னு சொன்னதும் உங்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வருது? தமிழ் படங்கள் ஏதாவது பார்த்தீங்களா? தமிழ் நடிகர்கள் யாருடைய பேராவது உங்களுக்கு தெரியுமா? என்றெல்லாம் கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் என்ன பதில் சொன்னார் என்றால், எனக்கு தமிழ்நாடு மிகவும் பிடிக்கும் தமிழ்நாட்டில் எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை மட்டுமே தெரியும். அவரது படங்கள் விரும்பி பார்ப்பேன். சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தைக் கூட நிறைய முறை பார்த்தேன். அதுவும் என் அப்பா அம்மா பாட்டி தாத்தா என் மகன் என குடும்பத்துடன் அமர்ந்து அந்த படத்தை பார்த்தோம். இன்னும் சொல்லப் போனால் அது எங்க ஊர் நிறுவனமான அமேசான் பிரைம் வீடியோவில் இருந்ததால் அடிக்கடி ஜெயிலர் படத்தை போட்டு பார்த்தோம்.
ஜெயிலர் படத்தின் பாடல்களும் வசனங்களும் ரொம்பவே அற்புதமாகவும் பிரமிப்பாகவும் இருந்தது. ரஜினி படம் பார்ப்பதில் ஒரு மிகப்பெரிய சந்தோசமே இருக்கிறது. இவ்வாறு அந்த பேட்டியில் அந்த அமெரிக்க தூதர் பேசி இருந்தார். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் அடங்கி இருக்கிறது 16 நிமிடம் மொத்தம் அந்த அமெரிக்க தூதர் பேசி இருந்தார். ஆனால் அதில் ஒரு நிமிடம் மட்டுமே சூப்பர் ஸ்டாரை பற்றி பேசி இருந்தார்.
குவிந்த ரஜினி ரசிகர்கள்!
அந்த ஒரு நிமிட பேச்சுக்காக 16 நிமிட வீடியோவையும் பார்த்த நபர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். ஏனென்றால் அந்த வீடியோவின் டைட்டிலே தலைவர் ரஜினியின் புகைப்படத்தை வைத்து அமெரிக்க தூதர் தலைவரைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதை தான் வைத்திருந்தார்கள். மேலும் youtube இல் அந்த வீடியோவுக்கு கீழே கமெண்ட் செக்ஷனில் சென்று பார்க்கும் போது நூற்றுக்கு 90 பேர் தலைவர் ரஜினி பற்றி தான் அந்த கமெண்டில் பேசியிருந்தனர். அவர் அரசியல் பற்றியும், இந்தியா அமெரிக்கா உறவு பற்றியும் நிறைய விஷயங்கள் பேசி இருந்தார். இருந்தாலும் மக்கள் அந்த பேட்டியை பார்ப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது தலைவர் ரஜினி பற்றி பேசியதுதான். அதனால்தான் கமெண்டில் நிறைய ரஜினி ரசிகர்களும் சரி பொதுவான சினிமா ரசிகர்களும் சரி அனைவருமே சூப்பர் ஸ்டாரை பற்றி புகழ்ந்து பேசி இருந்தார்கள்.
இதன் மூலம் இந்தியாவின் அடையாளமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திகழ்கிறார் என்பது உறுதியாகிறது. என்று கூட நிறைய பேர் அதில் எழுதி இருந்தனர். இந்த அளவுக்கு உலகம் முழுவதும் புகழ்பெற்ற நடிகர் நமது சூப்பர் ஸ்டார் ரஜினியாக தான் இருக்க முடியும்.
ரஜினி பற்றி அமெரிக்க நடிகர்!
சரி இது ஒரு புறம் இருக்க அடுத்ததாக அமெரிக்க நடிகர் எட்வர்ட் தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அவர் இப்போது தனுஷ் அவர்கள் நடித்த வெளியாகி இருக்கும் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு சில தமிழ் படங்களிலும் அவர் நடித்திருக்கிறார் அவரிடம் பேட்டி எடுத்த நிருபர் தமிழ் நடிகர்களின் புகைப்படங்களை காட்டி அவர்களைத் தெரியுமா என்று கேட்டார்.
அதற்கு அந்த அமெரிக்கா நடிகர் சில நடிகர்களை தெரியாது என்றும், சில நடிகர்களை தெரியும், என்றும் ஒரு சிலரை வெகுவாக புகழ்ந்தும், அவருடைய படங்கள் நான் தொடர்ந்து பார்ப்பேன் என்றும் கூறினார். முதலில் அந்த நிருபர் விஜய் புகைப்படத்தை காட்டி இவர் யார் என்று தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு எட்வர்ட் தட்ஸ் விஜய் என்று கூறினார்.
அதன் பிறகு விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் வேடத்தில் வருவார் இல்லையா, அந்த ரோலக்ஸ் புகைப்படத்தை காட்டி இவர் யார் என்று தெரிகிறதா? என்று கேட்கும் போது அமெரிக்கா நடிகர் சாரி ஐ டோன்ட் நோ என்று கூறிவிட்டார். அதன் பிறகு நிருபர் அவர்தான் சூர்யா என்றும் சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார் என்றும் கூறினார்.
அதன் பிறகு அஜித் அவர்களுடைய புகைப்படத்தை அந்த நிருபர் காட்டி இவர் யார் என்று தெரிகிறதா? என்று கேட்க அமெரிக்க நடிகரோ இவர் தான் என்னுடைய பேவரைட் ஆக்டர் என்று கூறினார். ஆனால் பெயரை சொல்லும் போது கமல்ஹாசன் என்று கூறிவிட்டார். அதன் பிறகு அவர் கமலஹாசன் அல்ல அஜித் என்று அந்த நிருபர் அவருக்கு விளக்கினார்.
தலைவா என்ற எட்வர்ட்!
இறுதியாக சூப்பர் ஸ்டாரின் புகைப்படத்தை காட்டி இவர் யார் என்று தெரிகிறதா? என்று கேட்டார் சூப்பர் ஸ்டாரின் புகைப்படத்தை காட்டி யார் என்று கேட்டால் சின்ன குழந்தை கூட சொல்லுமே இவருக்கு தெரியாதா என்ன? ஆனால் அவர் சொன்ன விஷயம் தான் ஆச்சரியமே! அதுவரையும் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்த அந்த அமெரிக்க நடிகர் சூப்பர் ஸ்டாரின் புகைப்படத்தை காட்டியதும் அவருடைய பாடி லாங்குவேஜ் மாறியது. தலைவா என்று கூறிவிட்டு ரஜினிகாந்த் சார் என்று கூறினார். அதன் பிறகு சூப்பர் ஸ்டார் சமீபத்தில் நடித்த வெளியான ஜெயிலர் திரைப்படத்தைப் பற்றியும் பேசினார்.
ஜெயிலர் திரைப்படத்தில் தலைவர் பேசும் ஹுக்கும் டயலாக்கையும் பேசி காண்பித்தார். அந்த நிருபரே மிரண்டு விட்டார். ஒரு அமெரிக்க நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை பற்றி எவ்வளவு தெரிந்து வைத்துள்ளார். அவர் படங்களை எப்படி விரும்பி பார்க்கிறார். அது மட்டும் அல்லாமல் அவரை தலைவா என்று அழைக்கிறார். இதுதான் தலைவர் ரஜினிகாந்த் அவர்களுடைய மாஸ் உலகம் முழுவதும் மாஸ் காட்ட ரஜினி ஆல் மட்டுமே முடியும். வெளிநாட்டு பிரதமர்கள் கூட சூப்பர் ஸ்டாரை வீட்டுக்கே வந்து சந்திக்கிறார்கள். அவருடன் செல்பி எடுத்து மகிழ்கிறார்கள்.
எல்லா பெருந்தலைகளும் தலைவர் ரசிகர்கள் தான்!
இதெல்லாம் வேற எந்த தமிழ் நடிகர்களுக்கும் கிடைக்காத பாக்கியம். தமிழ் நடிகர்களுக்கு மட்டுமல்ல இந்திய நடிகர்களுக்கே கிடைக்காத பாக்கியமாக தான் இதை பார்க்க முடியும். ஏனென்றால் ஷாருக்கான் முதல் பிரதமர் மோடி வரை எல்லோருமே சூப்பர் ஸ்டாரை தலைவா என்று அழைத்து மகிழ்கிறார்கள். சூப்பர் ஸ்டார் என்று வந்து விட்டால் எல்லோருமே ரசிகர்களாக மாறி விடுகிறார்கள். 73 வயதிலும் இன்னும் ரசிகர் பட்டாளம் கொஞ்சம் கூட குறையாமல் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே போகிறது, என்றால் அதற்கு தலைவர் ரஜினியின் கடின உழைப்பும் ஒரு முக்கிய காரணம்.
இன்றும் முதல் படம் போலவே உழைக்கிறார். ஒரு நிமிடம் கூட தாமதமாகாமல் படப்பிடிப்பிற்கு செல்கிறார். இந்த டெடிகேஷன் தான் அவரை இன்னுமும் நம்பர் ஒன் இடத்திலும், சூப்பர் ஸ்டார் என்கிற மிகப்பெரிய அந்தஸ்திலும் வைத்துள்ளது. சூப்பர் ஸ்டாரின் புகழ் என்பது இன்னும் எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் நிலைத்து நிற்கும்!

கருத்துகள் இல்லை