முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினி பங்கேற்றார்!
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா!
சென்னையில் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நேற்று (28/05/2022) நடந்தது. இந்த விழாவில் அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்தியக் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இந்த விழாவில் கலந்து கொண்டார். கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் கலைஞர் கருணாநிதியின் சிலையையும் திறந்து வைத்தார். இந்த விழாவானது நேற்று மாலை 6 மணியளவில் துவங்கியது. இந்த விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்ட விஷயம் தான் இப்போது அனைவராலும் பேசு பொருளாக மாறியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தலைவர் ரஜினி அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். இருந்தாலும் ரஜினிகாந்த் பங்கேற்பாரா? அல்லது பங்கேற்க மாட்டாரா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது. இப்படி இருக்கும் பட்சத்தில் தான் தலைவருடைய கார் போயஸ்கார்டன் இல்லத்தில் இருந்து வெளியே வந்தது. அப்போதே ரஜினி கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு தான் செல்கிறார் என்ற தகவல்கள் வெளியானது. ரஜினியும் அங்கே தான் சென்றார். அந்த விழாமேடைக்கு தலைவர் வந்தததும் அனைவரும் பரபரப்பானார்கள்!
ரஜினிகாந்த் அந்த அரங்கின் உள்ளே நுழைந்தார். கூடவே வைரமுத்துவும் இருந்தார். வரிசையாக அனைவருக்கும் வணக்கம் சொல்லியவாறே வந்த தலைவரை உதயநிதி எழுந்து நின்று வரவேற்றார். ரஜினி உதயநிதியை பார்த்ததும் சிரித்தபடியே அவர் தோளை தட்டிக்கொடுத்தார். அவருடன் தயாநிதி மாறனும் ரஜினியை வறவேற்றார். அவருக்கு ஒரு வணக்கம் சொல்லிவிட்டு நகர்ந்தார் சூப்பர்ஸ்டார். அடுத்ததாக கனிமொழி வறவேற்றார். அவரிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு சென்றார் ரஜினி. கொஞ்ச நேரம் கழித்து வெங்கய்யா நாயுடு தலைவரை சந்தித்துப் பேசினார்.
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு!
அவரிடம் அன்பாக சில வார்த்தைகளை பேசினார் ரஜினிகாந்த். அவருக்கு பிறகு முதலமைச்சர் ஸ்டாலினும் தலைவரை சந்தித்துப் பேசினார். நீங்கள் இந்த விழாவில் கலந்துகொண்டதுக்கு மிக்க நன்றி. மிகவும் மகிழ்ச்சி என்று ஸ்டாலின் சொன்னார். பதிலுக்கு தனது டிரேட் மார்க் புன்னகையை பரிசாக்கினார் ரஜினிகாந்த்! ஸ்டாலினும் தலைவரும் பேசும்போது ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டது. அந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதுலையும் நம் ரசிகர்கள் பலரும் அதற்கு ஒரு கேப்ஷனையும் உருவாக்கி பகிர்ந்து வருகிறார்கள்.
அதாவது, ஸ்டாலின் தலைவரைப் பார்த்து வணக்கம் சொல்லி வரவேற்றுள்ளார். அந்த புகைப்படத்துக்கு நன்றி சொல்ல உனக்கு, வார்த்தை இல்லை எனக்கு என்ற பாடலின் கேப்ஷனை போட்டு நமது ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள். அந்த கேப்ஷன் எதற்காக போடுகிறார்கள் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதாவது ஒரு வேளை தலைவர் அரசியலுக்கு வந்திருந்தால் அது நிச்சயமாக இவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்பதால் இவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. அதனால் தான் அந்தப்பாடலை,
அதாவது, நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு என்ற வரிகளை கேப்ஷனாக போட்டு தலைவருக்கு ஸ்டாலின் வணக்கம் சொல்லும் புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள் ரஜினியின் ரசிகர்கள். அதன் பிறகு இன்னொரு முக்கியமான சம்பவமும் அந்த நிகழ்ச்சியில் நடந்துள்ளது. வெங்கையா நாயுடு தலைவரை சந்தித்துப் பேசினார் என்று நாம் சொல்லியிருந்தோம். பேசிவிட்டு என்ன செய்திருக்கிறார் என்றால், அவருடைய அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கத்தில் தலைவருடன் அவர் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இந்தியாவின் ஐகான் ரஜினிகாந்த்!
இதற்கும் நமது ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். வெங்கையா நாயுடு கலந்து கொண்டது என்னவோ, கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் தான். ஆனால் அதை சொல்லும் போது ரஜினியுடன் அவர் எடுத்த புகைப்படத்தை தான் பகிர்ந்துள்ளார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். எல்லோருக்குமே ஒரு ஐ கானாக திகழ்பவர் தான் சூப்பர்ஸ்டார் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். எது எப்படியோ தலைவர் இந்த விழாவில் கலந்துகொண்டது பற்றி தான் இப்போது எந்தப் பக்கம் திரும்பினாலும் பேசிக்கொள்கிறார்கள்.
இன்னொரு பக்கம் பார்த்தால் நமது ரசிகர்களில் சிலர் தலைவர் இந்த விழாவில் கலந்துகொண்டிருக்ககூடாது என்று தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதெல்லாம் தலைவருக்கு நன்றாகவே தெரியும். எந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பது. தலைவரைப் பொறுத்தவரை யாரையும் கஷ்டப்படுத்த நினைக்க மாட்டார். கலைஞரும் மற்ற அரசியல் விஷயங்களில் எப்படியோ? ஆனால் ரஜினி என்று வந்து விட்டால் அவரை எந்த ஒரு இடத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டார். நிறைய இடங்களில் தலைவரை கூடவே அழைத்து செல்வார். தலைவரின் பட விழாக்களில் கலந்து கொள்வார்.
இதனால் தலைவருக்கும் கலைஞருக்கும் நல்ல நட்பு மலர்ந்தது. அந்த நட்பின் காரணமாக தான் ரஜினி நேற்று அந்த சிலைதிறப்பு விழாவில் கலந்துகொண்டார். மற்றபடி அரசியல் ரீதியாக அல்ல. இந்த விழாவில் அதாவது, தற்போது நடந்து முடிந்த கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா வில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது என்ன பேசினார் என்றால், கலைஞர் அரசியலில் மட்டும் சாதித்தவர் அல்ல. பன்முகத் தன்மை கொண்டவர் தான் கலைஞர். அவர் இலக்கிய திறன் கொண்டவர். சினிமாவில் அவர் சாதித்தது ஏராளமான விஷயங்கள். இன்றளவும் அவருடைய வசனங்கள் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
ரஜினிகாந்த் பற்றி ஸ்டாலின்!
இந்த விஷயமெல்லாம் எனது பாசமிகு நண்பர் சூப்பர்ஸ்டார் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இவ்வாறு கலைஞர் நிறைய சாதனைகள் செய்துள்ளார் என்று ஸ்டாலின் கூறினார். இந்த விஷயங்கள் நண்பர் ரஜினிக்கு தெரியும் என முதலமைச்சர் சொன்ன போது கேமராவை தலைவரின் பக்கம் திருப்பினார்கள். ஆனால் அவர் எந்த ரியாக்ட்சனும் கொடுக்கவில்லை. அவர் பேசுவது உற்றுக் கவனிபது போல் இருந்தார் சூப்பர்ஸ்டார். சரி இந்த நிகழ்வில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு விழாவுக்கு சிறப்பு சேர்ந்துள்ளார். இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை சொல்ல ஆசைப்படுகிறோம்.
சிவாஜி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மெகா பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்று. அந்த படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். அந்த படத்தில் வெள்ளிவிழாவில் கலைஞர் கருணாநிதி கலந்து கொண்டார். அந்த சமயத்தில் தமிழகத்தின் முதல்வராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த விழாவில் கலைஞர் பேசும்போது சூப்பர்ஸ்டாரை வானளாவ புகழ்ந்து பேசினார். அதிலும் அவர் கூறிய ஒரு விஷயத்தால் அரங்கமே அதிர்ந்தது. அது என்னவென்றால், சூப்பர்ஸ்டார் இப்போது அடைந்திருக்கும் உயரத்தை சொல்லவேண்டும் என்றால்,
நட்சத்திரங்களை எல்லாம் கடந்து சூரியனுக்கு அருகாமையில் அதாவது சூரியனுக்கு நிகராக இருக்கிறார் என்று சொன்னார் கலைஞர். இதனைக்கேட்டு தான் ரசிகர்கள் உற்சாக ஆரவாரம் போட்டனர். அதன் பிறகு இதையும் நீங்கள் வைரமுத்து சொன்னது போல தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அரசியல் ரீதியில் எடுத்துக்கொள்ள கூடாது என்று கலைஞர் சொல்லிவிட்டு சிரித்தார். உடனே தலைவரும் சிரிக்க அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது. அப்போது தலைவருக்கு இருந்த அந்த அரசியல் பவர் என்பது நாடறிந்த விஷயமே!
தலைவர் பேசிய ரியல் பஞ்ச்!
அதனாலையே, அரசியல் ரீதியாக சொல்ல வில்லை என்றாலும், இரண்டு அர்த்தமாக பேசுவதில் கலைஞர் வல்லவர். அதனால் அப்படி கூறினார். அதன் பிறகு அதே விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பேசும் போது ஒரு பக்கா பஞ்ச் வசனம் பேசினார் கருணாநிதி பற்றி. இப்போது கேஜிஎப்2 படத்தில் வந்த டயலாக்கூட ரஜினி பேசியதைப் பார்த்து தான் யோசித்திருப்பார்கள் போல. சூப்பர்ஸ்டார் கலைஞரை பார்த்து என்ன சொன்னார் என்றால், சிலருக்கு கடவுளைப் பிடிக்காது. ஆனால் கடவுளுக்கு அவங்களைப் பிடிக்குமே என்று சொன்னார் தலைவர்.
அதாவது, கலைஞர் கடவுள் இல்லையென்று சொல்லும் நாத்திக வாதி. அவருக்கு கடவுளை பிடிக்க வில்லை என்றாலும் கடவுளுக்கு அவரை பிடிக்குமே. என்று தலைவர் சொல்ல, கருணாநிதி சிரிக்க ஆரம்பித்து விட்டார். அந்த டயலாக்கை வைத்து தான் யஷ் அந்த வசனம் பேசியிருப்பார் போல. இந்த அளவுக்கு தலைவருக்கும் கலைஞருக்கும் இருக்கும் அந்த நட்பின் காரணமாக தான் இந்த சிலை திறப்பு விழாவுக்கு ரஜினி சென்றுள்ளார். என்றுமே முடிந்தவரை பாஸிட்டிவிட்டியை பரவச் செய்யவேண்டும் என்று தான் தலைவர் நினைப்பார். அதுதான் சூப்பர்ஸ்டார் மனசு. ரஜினி சாருடைய ரியல் லைப்க்கே நிறைய பேர் ரசிகர்களாக இருக்காங்க என்றால் பாருங்க...
அதனால் தான் அவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

கருத்துகள் இல்லை