இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினி தான்! அதிர்ந்த பாலிவுட்!
இன்று மட்டுமல்ல! என்றுமே நம்பர் ஒன் நான் தான் என நிரூபித்த ரஜினி!
சூப்பர்ஸ்டார் யாரென்று கேட்டால் சின்ன குழந்தையும் கூட சொல்லும். அப்படிப்பட்ட சூப்பர்ஸ்டாரை நாங்க முந்திட்டோம் என்று இங்கு சிலர் கொக்கரித்துக்கொண்டு இருக்கையில் என்னை முந்த இன்னொருவன் பிறக்கவில்லை என்று மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார் ரஜினி! 47 ஆண்டுகால வரலாற்றை அவ்வளவு சீக்கிரம் யாரும் அசைத்துக்கூட பார்க்க முடியாது அல்லவா?
தலைவரின் வரலாற்றில் புதிய மைல் கல் ஒன்றை எட்டியுள்ளார் அது பற்றி தான் இந்த பதிவில் விரிவாக பார்க்கப் போகிறோம்!
சூப்பர்ஸ்டாருக்கு 71 வயது என்பதென்னவோ உண்மை தான். ஆனால் அது கேமராவுக்கு வெளியில் தானே தவிர, கேமராவுக்குள் வந்து விட்டால் போதும் இளம் வாலிபராக துள்ளிக்குதிக்க ஆரம்பித்து விடுகிறார். ரசிகர்கள் அவரை திரையில் பார்த்தாலே உற்சாகமாகிவிடுகிறார்கள். அவர் வந்து நின்னாலே விசில் பறக்கிறது. கைத்தட்டல்களும் விண்ணை முட்டுகிறது. இன்றளவும் தனக்கான ரசிகர்களை அப்படியே தான் தக்க வைத்துக் கொண்டுள்ளார். நிறைய பெரிய நடிகர்கள் இப்போது கேரக்டர் ரோலுக்கு மாறிவிட்டார்கள். ஆனால் ரஜினியோ இன்றும் கதாநாயகனாகவே ஜொலிக்கிறார்!
சமீபத்தில் சூப்பர்ஸ்டார் நடிப்பில் அண்ணாத்த படம் வெளியானது. விமர்சன ரீதியாக இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் மிகப்பெரிய அளவில் சாதனை புரிந்தது. அதற்கு என்ன காரணம் என்றால் ரஜினிகாந்த் தான். அந்த ஒற்றை மனிதரால் மட்டும் தான் அண்ணாத்த படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்ற முடிந்தது. ரஜினி படத்தை பொறுத்தவரை விமர்சனங்களை எல்லாம் மக்கள் ஒரு பொருட்டாகவே எடுக்க மாட்டார்கள்.
ரஜினி படத்துக்கு மட்டும் தான் நம்பி போவாங்க!
ஏனென்றால் ரஜினி படத்தை ஒரு முறையாவது தியேட்டர்களில் பார்த்து விடவேண்டும் என்பது மக்களின் ஆசையாக இருக்கிறது. ரசிகர்கள் கண்டிப்பாக பலமுறை பார்ப்பார்கள். அதில் சந்தேகமில்லை. ஆனால் குடும்ப ஆடியன்ஸ் ஒரு படத்தை தியேட்டரில் வந்து பார்ப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் கடினமான விஷயமாகத்தான் உள்ளது. ஆனால் தலைவர் படத்தை பொருத்தவரை, அந்த பிரச்சனை இல்லை. தலைவரை ஒரு முறையாவது தியேட்டரில் பார்க்கதான் எல்லோரும் விரும்புகிறார்கள்.
ரஜினிகாந்த் படத்துக்கு நம்பி குடும்பத்துடன் தியேட்டருக்கு போகலாம் என மக்களுக்கு நன்றாக தெரிந்துள்ளது. அதனாலேயே மற்ற நடிகர்களை காட்டிலும் ரஜினிக்கு அதிக மவுசு இருக்கிறது. அதனாலேயே இன்றளவும் அவரைத்தேடி தயாரிப்பாளர்கள் படையெடுக்கிறார்கள். ரஜினி மேல பணம் போட்டா அது நஷ்டம் ஆகாது என்று தயாரிப்பாளர்கள் தெரிந்து வைத்துள்ளார்கள். அதனாலேயே தான் தலைவருக்கு எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் வழங்க தயாரிப்பு நிறுவனம் தயாராக இருக்கிறது.
இப்போது வெளியாகியிருக்கும் ஒரு தகவல் கோலிவுட்டை மட்டுமல்லாது பாலிவுட்டையும் கூட அதிரச்செய்துள்ளது. அது என்ன தகவல் என்றால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது அடுத்த படத்திற்காக வாங்கப்போகும் சம்பளம் தான் அது. இதற்கு முன்னதாக ரஜினி 120 கோடி சம்பளமாக பெற்று வந்த நிலையில், தற்போது தனது சம்பளத்தை 150 கோடியாக உயர்த்தியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி சில செய்தி ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. இதுதான் தற்போது கோடம்பாக்கத்தின் சூடான தகவலாக உலா வருகிறது.
விஜய் சம்பளம் பற்றி வெளியான தகவல்!
சில தினங்களுக்கு முன்பு தான் நடிகர் விஜய்யுடைய சம்பள விவரம் வெளியானது. அதில் அவருக்கு 110 கோடி வரை சம்பளமாக பெறுகிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது ரஜினி மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளார். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சன்பிக்சர் நிறுவனமும் ரஜினிக்கு 150 கோடி சம்பளம் தர தயாராக இருக்கிறார்களாம். ஏனென்றால் சமீபத்தில் வெளியான அண்ணாத்த படம் அவர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்ததாம்.
சன்பிக்சர் நிறுவனம் தனது காலாண்டு கணக்கு காண்பிக்கும் போது, சூப்பர்ஸ்டாருடைய அண்ணாத்த படத்தின் வசூல் நிலவரத்தையும் கூறியிருந்தது. அதில் டமெஸ்டிக் மார்க்கெட்டில் மட்டும் 150 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியானது. அதாவது உள்நாட்டில் மட்டும் இந்த வசூல். மாறாக வெளிநாட்டிலும் ரஜினிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் அங்கும் மிகப்பெரிய வசூல் செய்திருக்கும் இந்த அண்ணாத்த படம். இதன் மூலமாக அந்த தயாரிப்பு நிறுவனம் நல்ல வருவாய் ஈட்டியுள்ளதாம்.
அதனால் தான் தற்போது சூப்பர்ஸ்டாருக்கு 150 கோடி சம்பளம் கொடுக்க தயாராக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி தான் இப்போது இந்திய திரையுலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலமாக கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் சூப்பர்ஸ்டார். இப்போது தலைவர் 169 படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி.
தலைவர் 169 அப்டேட்!
இந்த படத்துக்கான படப்பிடிப்புகள் விரைவில் நடக்க இருக்கிறது. அதாவது ஜூலை கடைசியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்த படத்துக்கான படப்பிடிப்பை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இந்த படத்தின் ரிலீஸ் தேதியையும் கூட படக்குழுவினர் லாக் செய்துள்ளனர். ஏற்கனவே இந்த படமானது 2023 பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது இந்தப்படம் 2023 தமிழ்ப் புத்தாண்டுக்கு தான் வெளியாகும் என்ற தகவல் கசிந்துள்ளது.
தலைவர் 169 படத்தில் ஐஸ்வர்யா ராய் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. பிறகு ரம்யாகிருஷ்ணன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாது பிரியங்கா மோகன் தலைவருக்கு மகளாக நடிப்பதாகவும் செய்தி வெளியானது. யோகிபாபு காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்கிறார்கள். பீஸ்ட் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் நிறைய பேர் தலைவர் 169 படத்திலும் வேலை செய்ய போகிறார்களாம்.
இதற்கிடையே இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் இது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயனே பேசியிருந்தார். நான் தலைவர் கூட நடிக்கிறேன் என்பது போல செய்திகளை நானும் பார்த்தேன். ஊருக்கு போகும் போது எங்க பெரியம்மா கூட கேட்டாங்க. தலைவர்கூட நடிக்கிறியாமே வாழ்த்துக்கள் என்று சொன்னாங்க. நான் சிரிச்சுக்கிட்டே உங்களுக்கு கூட தெரிஞ்சுருக்கு ஆனால் எனக்கு தெரியல பாருங்களேன் என்று சொன்னேன். உண்மையில் இந்த நிமிடம் வரை எந்த ஒரு அழைப்பும் வரவில்லை.
நெல்சனிடம் இருந்தோ சன்பிக்சர்ல இருந்தோ எந்த அழைப்பும் வரவில்லை. வந்தால் உடனடியாக போய் நடிக்க வேண்டியதுதான். தலைவர் கூட நடிக்குறக்கு தானே இவ்வளவு கஷ்டப்படுறாங்க எல்லோரும். வாய்ப்பு கிடைத்தால் கண்ணை மூடிக்கொண்டு நடிப்பேன் என்று அந்த பேட்டியில் சிவகார்த்திகேயன் சொன்னார். சூப்பர்ஸ்டார் கூட நடிக்கிறதுக்கு யாருக்கு தான் ஆசையில்லாமல் இருக்கும். அந்த ஆசையை தான் சிவகார்த்திகேயன் வெளிப்படுத்தியிருக்காரு.
திரைக்கதை கேஎஸ் ரவிக்குமாராமே!
தலைவர் 169 பற்றிய இன்னொரு முக்கியமான விஷயமும் வெளியாகிட்டு இருக்கிறது. இந்தப்படத்தை நெல்சன் திலீப்குமார் தான் டைரக்ட் பண்ணப்போகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் திரைக்கதைக்கு தலைவர் வேற ஒரு நபரை தேர்ந்தெடுத்திருப்பதாகவும் ஒரு தகவல் இணையத்தில் உலா வருகிறது. அந்த நபர் வேறு யாருமில்லை. ரஜினியின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவரான கேஎஸ் ரவிக்குமார் தான் அவர். தலைவர்169 படத்தின் கதை ரஜினியுடையது என்று ஒரு தகவல் வெளியானது.
அந்தக் கதை விரிவாக்கப்பணிகள் தான் சமீபத்தில் நடைபெற்று வந்தது. நெல்சன் திரைக்கதையில் ரஜினிக்கு திருப்தியில்லை என்பதனால் தான் இப்போது கேஎஸ் ரவிக்குமாரை திரைக்கதை எழுத சொல்லியிருக்கிறாராம் தலைவர் ரஜினி. இந்த செய்தியும் இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கிறது. மொத்தத்தில் இது எல்லாமே அன்அஃபீசியலான செய்திகள் தான். அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளியான செய்திகளில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன்பிக்சர் நிறுவனம் தயாரிக்கிறது இது தான் தலைவர் 169 படத்தை பொறுத்தவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தகவல். மீதியெல்லாமே இணையத்தில் பரவும் தகவல் தான்.
விரைவில் இந்தப்படத்தின் அப்டேட் எல்லாமே வெளியாகும் என்று தான் எல்லோரலும் எதிர்பார்க்கப் படுகிறது. சூப்பர்ஸ்டார் பிறந்த நாளில் தலைவர்169 படத்தின் டைட்டிலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை பற்றிய தகவல்கள் கிடைக்கும் போது அப்டேட் செய்கிறோம்!

கருத்துகள் இல்லை