நான் தான் பாக்ஸ்ஆபிஸ் கிங் என்று மீண்டும் நிரூபித்த ரஜினிகாந்த்
அண்ணாத்த எதிர்ப்பும் எதிர்பார்ப்பும்!
அண்ணாத்த படத்தை பொறுத்தவரை ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஏனென்றால் இந்த படம் பொங்கலுக்கே வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் முழுஅடைப்பு காரணமாக படம் வெளியாகவில்லை. தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்தது. அந்த நாள் முதலாக தீபாவளி எப்போது வரும் என்று ரசிகர்கள் காத்துக்கிடந்தனர். ஆனால் ரசிகர்களில் சிலர் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னதால் மனமுடைந்து மாற்றுக்கட்சியில் இணைந்தனர். இதனால் ரஜினி படம் ஓடாது என்று நினைத்துக்கொண்டனர் ஹேடர்ஸ்.
ஹேடர்ஸ் நினைத்தது போலதான் அண்ணாத்த படத்தின் பாடல்களும் டீசரும் டிரைலரும் எதிர்பார்த்த அளவுக்கு பார்வைகளை பெறவில்லை. இதனால் ஹேடர்ஸ் ரொம்பவே உற்சாகம் அடைந்தனர். ஆனால் அவர்களுக்கு அன்று தெரிந்திருக்கவில்லை. ரஜினிக்கு இந்த சோசியல் மீடியாக்கள் பற்றி தெரியாத ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது என்று. அண்ணாத்த படமும் வெளியானது. வழக்கம் போலவே விமர்சனம் என்ற பெயரில் படத்தை தாறுமாறாக விமர்சனம் செய்தார்கள். அவர்கள் செய்த விமர்சனப்படி பார்த்தால் படம் ஒரு நாள் ஓடுவதே பெரிய காரியம் என்பது போல தோன்றியது. ஆனால் அங்கே நடந்ததோ வேறு.
தியேட்டர்களில் மேஜிக் தான் நிகழ்துள்ளது. ஆம் ரஜினிகாந்த் என்னும் மேஜிக். இந்த படத்தை பார்க்க தியேட்டரில் கூட்டம் அலைகடலென திரண்டனர். அது ரசிகர்கள் கூட்டம் மட்டுமல்ல. குடும்ப ஆடியன்ஸ் கூட்டமும் தான். குடும்பம் குடும்பமாக அண்ணாத்த படத்தை பார்க்க அனைவரும் சென்றார்கள். தியேட்டர் நிரம்பி வழிந்தது. அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்பல் போர்டு மாட்டப்பட்டது. இத்தனை எதிர்ப்புகள் நெகட்டிவ் விமர்சனங்கள் என்று எல்லாவற்றையும் முறியடித்தது அண்ணாத்த கம்பீரமாக வென்றிருக்கிறார். அதற்கு முழுக்க முழுக்க காரணம் தலைவர் தான்.
மிகப்பெரிய அளவில் வெற்றி!
இந்த படம் ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு பிறகு வெளியான படம். அதாவது நான் அரசியலுக்கு வரவில்லை இனிவரும் காலங்களிலும் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொன்ன பிறகு வெளியான முதல் படம். அதனால் கண்டிப்பாக படம் ஓடாது என்று தான் அனைவரும் சொன்னார்கள். ஏனென்றால் அதுவரை சொல்லப்பட்ட ஒரு விஷயம் ரஜினிகாந்த் அரசியல் பேசி தான் படத்தை ஓடவைக்கிறார் என்பது தான். நம்மளும் எத்தனையோ முறை சொல்லிவிட்டோம். அரசியல் பேசினால் படம் ஓடாது. திரைப்படம் நன்றாக இருந்தால் மட்டுமே ஓடும் என்று.
அப்போது எல்லாம் நாம் சொல்வதை யாருமே காதில் வாங்கிக்கொள்ளவில்லை. இப்போது தான் அவர்களுக்கு உண்மை புரிந்திருக்கும். அண்ணாத்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்துள்ளது. ஏனென்றால் அண்ணாத்த படம் நன்றாக இருக்கிறது. அதனால் மக்களுக்கு இந்த படம் பிடித்துள்ளது. இவர்கள் கணக்கு படி அண்ணாத்த படம் தோல்வி அடைந்திருக்க வேண்டும். ஏனென்றால் ரஜினி அரசியலுக்கு இனிமேல் வரமாட்டேன் என்று உறுதியாக கூறிவிட்டார். அதனால் படம் தோல்வியடையும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் தலைவர் தான் யார் என்பதை நிரூபித்து விட்டார்.
இந்த திரைப்படம் நல்ல வசூலை பெற்றுள்ளது. நிறைய வசூல் சாதனையை நிகழ்த்தி உள்ளது. தமிழகத்தில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் அண்ணாத்த தான். 2021 உலக அளவில் அதிகம் வசூலித்த இந்திய திரைப்படமும் இதுதான். இந்த படத்தின் மீது அத்தனை விமர்சனங்களை அள்ளி வீசினாலும் ஒரு மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படமாக அண்ணாத்த அமைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ரஜினிகாந்த் என்ற காந்த சக்தி தான். இந்த வயதிலும் அவரின் எனர்ஜிய பார்க்கும் போது நமக்கே ஆச்சரியமாக இருக்கிறது. 70 வயதில் நடிக்கலாம். ஆனால் ஹீரோவாக நடிப்பது கஷ்டம். ஹீரோவாக நடித்தாலும் படத்தை எல்லோரும் ரசிப்பது அதைவிட கஷ்டம்.
ஏனென்றால் அவர் ரஜினி!
இது எல்லாவற்றையுமே ரஜினி சாதாரணமாக செய்கிறார். அவரிடம் ஏதோ ஒரு மேஜிக் இருக்கிறது. அது தான் அவரின் திறமை. தொழில் மீது அவருக்கு இருக்கும் அக்கறை. இந்த சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் போதும் கூட அவரின் கடின உழைப்பு. ரசிகர்களின் அன்பு மற்றும் கடவுளின் அருள் இவை அனைத்தும் தான் ரஜினிகாந்தின் மேஜிக். இது அனைத்தும் சேர்ந்து தான் அவர் படத்தை இமாலய வெற்றி பெறவைக்கிறது. ஆனால் இதை அறியாத சிலர் தான் அவருக்கு எதிராக பேசிவருகிறார்கள். இதையெல்லாம் ரஜினி இன்று நேற்றல்ல. 45 வருடங்களாக சந்தித்து வருகிறார். அந்த விமர்சனங்களை கடந்து வெற்றியும் பெறுகிறார். அதனால் தான் அவர் ரஜினி.
அதன் பிறகு இன்னொரு விஷயம் பரவலாக பேசப்பட்டுவருகிறது. அது என்னவென்றால் மகள் வயதுள்ள கீர்த்தி சுரேஷ் தங்கையாக நடித்துள்ளார் இது நியாயமா என்று ஒரு சிலர் கேட்கிறார்கள். இதற்கு நாம் பதில் சொல்வதற்கு முன்பாக, கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா சரியான பதில் சொல்லியிருக்கிறார். அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், இது நிஜவாழ்க்கை கிடையாது, சினிமா. அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். நிஜவாழ்க்கையில் மகள் வயது பெண்ணை திருமணம் செய்தால் கேட்கவேண்டியதுதான். ஆனால் சினிமாவில் நடித்து முடித்து வேடத்தை கலைத்துவிட்டால் எல்லாம் முடிந்தது. இது கூட தெரியாமல் இருக்கிறார்களா? ரஜினியையே எடுத்துக்குங்க, அவர் நிஜவாழ்க்கையில் எப்படி இருக்கிறார்?
விக் வைக்காமல் டை அடிக்காமல் பொது வெளியில் வருகிறார். அது அவரோட இயல்பான நிஜ வாழ்க்கை. ஆனால் சினிமா என்று வரும்போது தன்னோட கெட்டப் மாற்றுகிறார். ஏனென்றால் இது சினிமா. சினிமாவில் நடிப்பது தவறல்ல. ஆனால் நிஜவாழ்க்கையில் நடிப்பதுதான் தவறு. கீர்த்தி ரஜினிக்கு தங்கச்சியா நடித்திருக்கிறார் அவ்வளவு தான். நாளைக்கே ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவேண்டும் என்றாலும் நடிப்பாங்க. அது தொழில். அது நிழல், நிஜம் அல்ல என்பதை முதலில் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா அந்த பேட்டியில் கூறினார். மிகவும் உண்மையான விஷயம். திரை வேறு தரை வேறு என்பதை மக்கள் முதலில் உணர்ந்து கொள்ளவேண்டும்.
அண்ணாத்த சிறப்பு நிகழ்ச்சி!
அண்ணாத்த படம் தற்போது தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்த படக்குழுவினர் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சி ஒன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதில் ரஜினியை தவிர அண்ணாத்த படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றார்கள். அந்த சமயத்தில் ஒவ்வொருவரும் ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டனர். படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்தும் பகிர்ந்து கொண்டனர். அப்படி ஒரு ஃபன்னான விஷயத்தை சதீஸ் சொன்னார். மீனாவும் ரஜினியும் பேசிக்கொண்டிருக்கும் போது சதீஸ் தலைவரிடம், மீனா மேடம்க்கு அப்பாவாவும் நடிச்சிட்டீங்க. ஜோடியாகவும் நடிச்சிட்டீங்க. மகனா எப்போது நடிக்க போறீங்க என்று சதீஸ் கேட்டுள்ளார்.
அதற்கு தலைவர் சொன்ன பதில் தான் அல்டிமேட். மீனா பக்கத்துல உட்கார்ந்து இருந்திருக்காங்க. என்ன மீனா எப்போ பண்ணலாம் என்று மீனாக்கிட்டயே தலைவர் கேட்டிருக்கார். உடனே மீனா, டிரைலர்ல அத்தான் என்று கத்துவாங்க தெரியுமா? அதே போல சார் என்று கத்திருக்காங்க. இது ரொம்பவே காமெடியான சம்பவம். இதே மாதிரி இன்னொரு விஷயமும் நடந்திருக்கு. அதை நிகழ்த்தியவரும் சதீஸ் தான். மீனா குஷ்பு மற்றும் ரஜினி மூவரும் பேசிட்டு இருக்கும் போது வழக்கம் போல என்ட்ரிய கொடுத்திருக்கார் சதீஸ். அப்போது தலைவரிடம் உங்களுக்கு ரொம்ப பிடித்தது குஷ்புவா? மீனாவா? என்று கேட்டுள்ளார்.
அதற்கு ரஜினி, எனக்கு கீர்த்தி தான் பிடிக்கும் என்றுள்ளார். அதற்கும் ஒரு கேள்வி வச்சிருக்கேன் என்று. சதீஸ் மீண்டும் பேச்சை ஆரம்பித்துள்ளார். நீங்க கீர்த்தியோட அம்மாவுடனும் நடிச்சிட்டீங்க என்று சொல்லும் போதே தலைவர் குறுக்கிட்டு, உங்களுக்கு சூட்டிங் டைம்ஆச்சு கிளம்புங்க என்று கூறி தலைவர் சதீஸை அனுப்பி வைத்துவிட்டாராம். இந்த மாதிரி ஒரு மிகப்பெரிய சந்தோஷம் அண்ணாத்த படத்தின் மூலமாக நடந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று சதீஸ் அந்த நிகழ்ச்சியில் கூறினார். அண்ணாத்த படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் நடித்திருந்தார்கள் என்பதும் இந்த நேரத்தில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம்.
டவுன் டு எர்த் ரஜினிகாந்த்!
தலைவரின் இந்த குணம் உண்மையிலேயே யாருக்கும் வராது. தான் ஒரு உச்ச நட்சத்திரம் சூப்பர்ஸ்டார் இந்தியாவே கொண்டாடப்படக்கூடிய ஒரு நபர் என்பது தெரிந்தும் தனது சக நடிகர்களிடம் இந்த மாதிரி பழகுவது ரொம்பவே அற்புதமான விஷயம். டவுன் டு எர்த் என்று இந்த மாதிரி மனிதர்களின் குணத்தை தான் சொல்வார்கள். தலைவரை எல்லோருமே மதிப்பதற்கு அவரது இநத மாதிரி குணங்களும் ஒரு முக்கிய காரணம். அண்ணாத்த பற்றி இன்னொரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன் பாருங்க. அண்ணாத்த படம் உலகம் முழுவதும் வெளியானது. இது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
உலகம் முழுவதும் அதிகப்படியான தியேட்டர்களில் அண்ணாத்த ரிலீஸ் ஆனது. இதுவரை இந்திய படங்கள் எதுவும் இந்த அளவிற்கு வெளிநாடுகளில் ரிலீஸ் ஆகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்ணாத்த படம் ஓவர்சீஸ் வசூலும் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. அதுவும் அங்கே ஐம்பது சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. அப்படி இருந்தும் வெளிநாடுகளிலும் நல்ல வசூல் மழை பொழிந்துள்ளது அண்ணாத்த படம். இதனைக் கண்டு இந்திய திரையுலகமே ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த வயதிலும் தலைவர் நான் தான் பாக்ஸ்ஆபிஸ் கிங் என்று மீண்டும் நிரூபித்து இருக்கிறார்.
நிறைய பேர் நினைத்தது இந்த படம் சரியாக போகாது என்று தான். அதற்கான பணிகளையும் அவர்கள் சிறப்பாக செய்தனர். ஆனால் ரஜினியோ அத்தனை நெகட்டிவ் விமர்சனங்களையும் தூக்கி வீசிவிட்டு இந்த படத்தை ப்ளாக்பஸ்டர் படமாக மாற்றியுள்ளார். அது தான் ரஜினிகாந்த் அவர்களின் மிகப்பெரிய சாதனை. அது மட்டுமல்லாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தியேட்டரில் குவிய வைத்துள்ளார் ரஜினிகாந்த். தியேட்டர்காரங்க ரொம்ப நாளைக்கு பிறகு சந்தோஷமா நிறைய பேர் ட்வீட் பண்ணாங்க. முதல் நான்கு நாட்களுமே அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் காட்சியாக தான் அண்ணாத்த படம் ஓடியுள்ளது. அப்படி இருக்கும் போது எல்லா தியேட்டர் நிர்வாகிகளும் மகிழ்ச்சியாக தானே இருப்பார்கள். ரசிகர்களும் ரொம்ப உற்சாகமாக இருக்கிறார்கள். தலைவரும் ஹேப்பி தான்.

Super 💯 truth
பதிலளிநீக்குSuper ☆ only one man
பதிலளிநீக்கு