ரஜினி சார் அப்போதே சொன்னார்! இயக்குநர் சுந்தர் சி சொன்ன சுவாரஸ்யமான தகவல்!
சூப்பர்ஸ்டாரும் சுந்தர்சியும்!
சுந்தர்சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் தான் அருணாச்சலம். இந்த திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப்போனது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்துள்ளது. அதையெல்லாம் சுந்தர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பகிர்ந்துள்ளார். அப்படி அவர் பகிர்ந்த விஷயங்களை தான் நான் இப்போது எழுத்து வடிவில் சொல்லப்போகிறேன். இந்த வேளையில், அருணாச்சலம் படத்தை ரஜினியே தயாரித்து அதில் வந்த லாபத்தை எட்டு தயாரிப்பாளர்களுக்கு பகிர்ந்து கொடுத்தார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ரஜினி இஸ் எ கிரேட் மேன்.
முதலில் பிளாஷ்பேக் சம்பவத்தில் இருந்து வருவோம். இந்த சம்பவத்தை சுந்தர்சி தான் ஒரு மேடையில் கூறினார். இளமை ஊஞ்சல் ஆடுகிறது படத்தில் ரஜினியும் கமலும் இணைந்து நடித்தார்கள் என்பது உங்களுக்கு தெரிந்தது தான். அந்த படத்தை இயக்கியது ஸ்ரீதர் என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அந்த படத்தை இயக்க ஸ்ரீதர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்று உங்களுக்கு தெரியுமா? நிச்சயமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சொல்கிறேன் கேளுங்கள். அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. இளமை ஊஞ்சல் ஆடுகிறது படத்தில் ரஜினிகாந்த் ஒரு தொழிலதிபர். மிகுந்த செல்வம் படைத்தவர். கமல் ரஜினியின் நண்பர். தனது நண்பரான ரஜினிகாந்தின் நிறுவனத்தில் கமல் வேலை பார்த்துக்கொண்டிருப்பார்.
அந்த சமயத்தில், ரஜினி கையெழுத்து போடவேண்டும் என்று ஒரு நோட்டுப் புத்தகத்தை நீட்டுவார். அப்போது ரஜினிகாந்த் தன் பாக்கெட்டில் இருந்து ஒரு நீளமான பேனாவை எடுத்து கையெழுத்து போடுவார். அந்த பேனா பர்மா பஜார் போன்ற இடங்களில் 5 ரூபாய்க்கு நீளமாக இருக்கும் பேனா. இந்த காட்சியை படமாக்கும் போது ரஜினிக்கும் ஸ்ரீதருக்கும் விவாதமே நடந்துள்ளது. அந்த கையெழுத்துப் போடும் காட்சிக்காக ஸ்ரீதர் மிகவும் விலையுயர்ந்த பார்கர் பேனா வாங்கி வைத்துள்ளார். ஏனென்றால் ரஜினி அந்த படத்தில் கோடீஸ்வரர். அதனால் பேனாவும் விலை உயர்ந்ததாக கொடுத்தால் தான் அந்த காட்சி சிறப்பாக இருக்கும், என்பதற்காக இயக்குநர் அப்படி செய்திருக்கிறார்.
ரஜினி வித் ஸ்ரீதர்!
ஆனால் ரஜினியோ ஐந்து ரூபாய் பேனாவில் கையெழுத்து போடுகிறார். சூப்பர்ஸ்டார் செய்தால் அதில் காரணம் இல்லாமல் இருக்காது அல்லவா? ஸ்ரீதர் ஏன் இப்படி செய்கிறீர்கள்? உங்களுக்காக தான் இந்த காஸ்ட்லியான பேனா வாங்கி வந்துள்ளேன். நீங்கள் இந்த ஐந்து ரூபாய் பேனாவில் கையெழுத்து போடுகிறீர்கள். ஒரு கோடீஸ்வரர் ஐந்து ரூபாய் பேனாவில் கையெழுத்து போட்டால், மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? என்று ஸ்ரீதர் கேட்க, ரஜினி சிம்பிளாக சொன்னார். இதுதான் என் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று. இதனை கேட்ட ஸ்ரீதருக்கோ கடுங்கோபம் வந்து விடுகிறது.
ரசிகர்களுக்கு பிடிப்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். முதலில் கதைக்கு ஒத்து வரவேண்டும். இந்த காட்சி வைத்தால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் நான் சொல்கிற மாதிரி நடிங்க போதும் என்றார் ஸ்ரீதர். ஆனால் ரஜினியோ அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. பிறகு ஸ்ரீதரும் மனமில்லாமல் அந்த காட்சியை படமாக்கினார். அடுத்ததாக அதே படத்தில் ஒரு காட்சி. தொலைபேசி ஒலிக்கும். மாடியில் இருந்து இறங்கி வந்து போனை எடுக்க வேண்டும் இதுதான் ரஜினியிடம் சொல்லப்பட்டது. ஆனால் ரஜினிகாந்த் வந்ததும் போனை எடுக்கவில்லை. மீண்டும் ரிவர்ஸ்ல இரண்டு படி ஏறி பின் இறங்கி வந்து ரைட் ஹேண்ட்ல எடுத்து லெப்ட் ஹேண்ட்க்கு வீசி ஸ்டைலாக பேசுகிறார்.
உடனே கட் கட் கட் என ஓடி வந்த ஸ்ரீதர். என்ன சொன்னா, என்ன செய்யுறீங்க. நேரா வந்து போனை மட்டும் எடுத்து பேசுங்க போதும். மாடிப்படியில் ஏறி இறங்கி சாகசம்லாம் பண்ணவேண்டாம் என்றார். அடுத்த டேக். முதலில் இரண்டு படி பின் சென்றவர் இப்போது நான்கு படி சென்று மறுபடி வந்து போனை எடுக்கிறார். ஸ்ரீதருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் சொல்ற படி நடிக்க முடியுமா? முடியாதா? என்கிறார். இப்படி நடித்தால் தான் என் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று ரஜினி கூலாக சொன்னார். அவருக்கு அதற்கு மேல் அந்த காட்சியை எடுக்க மனமில்லாமல் கிளம்பிவிட்டார். அதன் பிறகு ஸ்ரீதருடைய அசிஸ்டன்ட் தான் அந்த காட்சியை படமாக்கினார்.
ரஜினியை தவறாக நினைத்து விட்டோம் என்று வருந்திய ஸ்ரீதர்!
இந்த திரைப்படத்தை இயக்கியதில் ஸ்ரீதருக்கு திருப்தியே இல்லை. ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீஸுக்கு தயார் ஆனது. படத்தில் ரஜினி ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று செய்த காட்சிகளை பார்த்து மக்கள் என்ன சொல்லுவார்களோ, என்று பயந்து கொண்டே தியேட்டருக்கு சென்றார் ஸ்ரீதர். ஆனால் அவர் நினைத்ததற்கு நேர்மாறாக ரஜினி எங்கெல்லாம் தனது ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நடித்தாரோ, அங்கெல்லாம் ஆடியன்ஸ் கைத்தட்டல் அரங்கையே அதிர வைத்தது. இதைப்பார்த்த இயக்குநருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. ரஜினியை நாம் தவறாக எடை போட்டுவிட்டோமே என்று வருந்தினார்.
இது ஒரு மேடையில் சுந்தர்சி சொன்ன தகவல் தான். அடுத்ததாக அவர் ஒரு இன்டர்வியூவில் அருணாச்சலம் படம் பற்றி பகிர்ந்து கொண்டார். அது என்ன என்பதை இப்போது எழுதுகிறேன். அருணாசலம் படத்திற்கு முதலில் குபேரன் என்று தான் டைட்டில் வைத்துள்ளனர். ஆனால் அது எப்படியோ கசிந்து செய்தித்தாள்களில் எல்லாம் வெளியாகிவிட்டது. அந்த டைட்டிலை இனிமேல் வைத்தால் நன்றாக இருக்காது என்பதால் வேற டைட்டில் வைக்கலாம் என்று படக்குழுவினர் முடிவு செய்தனர். சரி எல்லோரும் யோசிங்க, நானும் யோசிக்கிறேன் என்று சூப்பர்ஸ்டார் சொல்லி அனுப்பினார். அடுத்தநாள் தலைவரிடம் இருந்து சுந்தர்சிக்கு போன் வந்தது.
சுந்தர் உடனே வீட்டுக்கு வாங்க. சூப்பர் டைட்டில் கிடைச்சுருக்கு, என்று ரஜினிகாந்த் சொன்னார். சார், சஸ்பென்ஸ் எல்லாம் எனக்கு தாங்க முடியாது என்ன பெயர் என்று போன்லையே சொல்லுங்க என்றார் சுந்தர். இல்லை நீங்கள் வீட்டுக்கு வாங்க சொல்றேன் என்று சொல்லிவிட்டு போனை கட் செய்துவிட்டார் ரஜினி. அதன் பிறகு இயக்குனரும் அவசரஅவசரமாக கிளம்பி போயஸ்கார்டனுக்கு விரைந்தார். அங்கு போனால் வாசலில் இந்த படப்பிடிப்பு குழுவில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். சுந்தர் போனதும் அவரிடம் என்ன இங்கே நிற்கிறீங்க என்று கேட்க, அதற்கு அவர் தலைவர் தான் கூப்பிட்டு படத்தோட டைட்டில் சொன்னார் என்று சொல்லி முடிப்பதற்குள்ளாகவே, என்ன பேர் என்று கேட்டார் சுந்தர்சி.
தலைவர் சொன்னால் அதன் பவரே தனி!
அதற்கு அவர், நான் சொன்னா என்மேல சார் கோவித்துக்கொள்வார். நீங்களே போய் கேட்டுக்கோங்க, ஆனால் டைட்டில் செம மாஸ் என்று சொன்னார். சுந்தர்சிக்கோ ஆர்வம் தாங்க முடியவில்லை. சொல்லுங்க, நான் தலைவரிடம் சொல்ல மாட்டேன் என்று சொல்ல, அவர் முதலில் தயங்கிவிட்டு பிறகு அருணாச்சலம் என்று சொன்னார். இதனை கேட்ட இயக்குநருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது தான் மாஸ் டைட்டிலா? நல்லாவே இல்லை. நான் சார்கிட்ட பேசி மாத்த சொல்றேன் என்று அவரிடம் சொல்லிவிட்டு ரஜினியின் வீட்டுக்குள் நுழைந்தார் சுந்தர் சி. அவர் சார் சொல்லும் போது செம மாஸா இருந்துச்சே, இவரு ஏன் நல்லாயில்லை என்று சொல்கிறார் என்று யோசித்துக்கொண்டே சென்றுவிட்டார்.
சுந்தர் சி ஹாலில் அமர்ந்திருந்தார். தலைவர் மாடியிலிருந்து இறங்கி வந்ததும் சூப்பர் டைட்டில் கிடைச்சுருக்கு சுந்தர் என்றார். இவரும் தெரியாதது போல, என்ன டைட்டில் சார் என்று கேட்க, அருணாச்சலம் என்று சூப்பர்ஸ்டார் ஸ்டைலில் சொல்லியிருக்கிறார். அதைக்கேட்ட உடனேயே அருமையான டைட்டில் சார் என்று சுந்தர்சி சொல்லிவிட்டாராம். இது நல்லாயில்லை வேற பேர் மாத்தலாம் என்று சொல்ல போனவர், தலைவர் வாயிலிருந்து இந்த பெயரைக் கேட்டவுடனேயே சூப்பர் சார் என்று சொல்லிவிட்டாராம். சூப்பர்ஸ்டாருக்கு அவ்வளவு பவர். அவர் செய்யும் போது தான் அது ஸ்டைல். அவர் ஒரு சகாப்தம் என்று அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார் சுந்தர் சி.
சூப்பர்ஸ்டார் சொன்ன தத்துவம்!
அடுத்ததாக, இன்னொரு சூப்பரான தகவல். தகவல் என்பதை விட சூப்பர்ஸ்டார் சொன்ன அட்வைஸ் என்று சொல்லலாம். ரஜினி எப்போதுமே நிறைய அறிவுரைகளை ரசிகர்களுக்கு வழங்குவார். அதுபோல தான் சுந்தருக்கும் ஒரு தத்துவம் கூறியிருக்கிறார். தலைவர் சொன்னது என்னெவென்றால், ஒரு மனிதருக்கு வெற்றியின் கால அளவாக எட்டு வருடம் கடவுள் கொடுப்பார். அதற்குள் நாம் நிறைய சாதித்து கொள்ள வேண்டும். அந்த எட்டு வருடத்திற்கு பிறகு கடவுள் கண்டுக்க மாட்டார். அதனால் எட்டு வருடத்திற்குள் நிறைய சாதிங்க என்று சுந்தர்சியிடம் கூறியுள்ளார் ரஜினிகாந்த்.
அதற்கு சுந்தர்சி, இது உங்க விஷயத்திலே தப்பா இருக்கே சார், ஏனென்றால் நீங்க வெற்றி பெற ஆரம்பித்து 20 வருடங்களுக்கு மேல ஆச்சே என்று சுந்தர்சி தலைவரிடம் சொல்லியிருக்கிறார். அதாவது 20 வருடங்கள் என்று அவர் குறிப்பிட காரணம் இந்த சம்பவம் நடந்தது 1996ல், அருணாச்சலம் படம் சூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயம். அதனால் சுந்தர் 20 வருடங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு தலைவர் சொல்லியது தான் ஹைலைட்டே. கடவுள் கொடுக்கும் வாய்ப்பு என்பது டியூப்லைட் மாதிரி அல்ல, மின் விசிறி போன்றது. டியூப்லைட் என்றால் உடனே ஆப் ஆகிவிடும். ஆனால் விசிறி அப்படியில்லை. ஸ்விட்ச் ஆப் செய்தாலும் சற்று நேரம் சுத்தும். அந்த சமயத்தில் நாம் குதித்து குதித்து நம்மால் முடிந்த வரை சுத்தவேண்டும்.
அப்படி கிடைத்தது தான் இந்த இருபது வருடம் என்று கூறியுள்ளார் ரஜினிகாந்த். அந்த சமயத்தில் சுந்தர்ரை பேட்டி எடுத்துக்கொண்டிருந்த நிருபர் சொன்னார். இன்று வரை அந்த விசிறி சுற்றிட்டே தானே இருக்கு என்று. அதற்கு சுந்தர்சி சொன்னார். இன்று அசுரவேகத்தில் சுத்துகிறது என்று. உண்மையிலேயே தலைவர் இந்த வேகத்தில் சுத்துவதற்கு காரணம் நிறைய இருக்கிறது. தலைவர் பின்பற்றும் நேரந்தவராமை. தொழில் மீது காட்டும் அக்கறை. ரசிகர்கள் மீது அவர் வைத்துள்ள மரியாதை. ரசிகர்கள் அவர் மீது காட்டும் அளவுகடந்த பாசம். அவரின் நல்ல மனது, கடவுளின் துணை இப்படி பல்வேறு காரணங்கள் உள்ளது. சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தை பெறுவது பெற்றதோடு நில்லாமல் 72 வயதிலும் அந்த பட்டத்தை வேறு எந்த நடிகரும் நெருங்க கூட விடாமல் இருப்பது எல்லாம் சாதாரண விஷயம் அல்ல. ரஜினியால் மட்டுமே இது சாத்தியமாயிற்று.

Casino Finder (Google Play) Reviews & Demos - Go
பதிலளிநீக்குCheck Casino Finder (Google https://jancasino.com/review/merit-casino/ Play). A look at 바카라 사이트 some of https://deccasino.com/review/merit-casino/ the gri-go.com best gambling sites in the world. They offer 1등 사이트 a full game library,