விஜய் மீது எனக்கு பொறாமையா? தலைவர் ரஜினிகாந்த் கொடுத்த அதிரடியான பிரஸ்மீட்!
அதில் தெளிவாக விஜய்க்கு வாழ்த்துகளை கூறியது மட்டுமின்றி, MGR மற்றும் NTR ஆகியோரையும் தாண்டிய பிரம்மாண்ட வெற்றியை ஆச்சரியத்துடனும், மகிழ்வுடனும் பார்ப்பதாக மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதைவிட முக்கியமாக லால் சலாம் ஆடியோ லோஞ்சில் குறிப்பிட்டது போல விஜய்க்கும், தனக்கும் 25 வருட தலைமுறை இடைவெளி இருப்பதைக் குறிப்பிட்டு அவரைத் தனக்குப் போட்டியாக நினைப்பது தனக்கும் மரியாதை இல்லை என்றும், தன்னைப் போட்டியாக நினைப்பது அவருக்கும் மரியாதை இல்லை என்றும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
தனது பல வருடகால நண்பர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியுற்றதனால் அவரைப் பார்க்கப் போனதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் இரண்டு பெரிய கட்சிகளை இணைப்பது போன்ற கீழ்த்தரமான வேலையை இந்த ரஜினிகாந்த் செய்யமாட்டான் என்று ஆணித்தரமாக குறிப்பிட்டது மட்டுமின்றி விஜய்க்கு மாற்றங்களைக் கொண்டுவர மக்கள் அவகாசம் கொடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
சாதாரணமாகப் புரிதலுள்ள மக்களுக்கு இது போதுமானது. இப்போது விஜய்யும் ஒரு ப்ரஸ்மீட் மூலமாக தன்னுடைய தொண்டர்களை இதுபோன்ற ஈடுபடாமல் அரசியலில் பொறுப்பாக ஈடுபட வலியுறுத்துவதே சரியானது. மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு பதிலடி கொடுக்கும் ஆவேசத்துக்கு மத்தியில் இதையும் மாண்புமிகு முதலமைச்சர் செய்வது தான் நாகரிகம். ப்ரஸ்மீட் வைக்க ஏதும் தயக்கம் என்றால் அறிக்கை மூலமாகவேனும் தெளிவுபடுத்த வேண்டும். நானறிந்த வகையில் Actor Vijay இதைச் செய்து தன்னுடைய மேன்மையான தராதரத்தை மக்களுக்கு நிரூபிப்பார் என நம்புகிறேன்.
இப்போதும் வந்து சில தவிட்டுத் தற்குறிகள், "ஆனாலும் ரஜினிக்கு உள்ளார இருக்கும் வன்மம் அவரது பேச்சில் தெரிகிறது" , "அவர் ப்ரஸ்மீட் வைத்து விஜய்க்கு அந்த தைரியம் இல்லை என்று சூசகமாக வன்மத்தைக் கக்குகிறார்" , "அதெப்படி விஜய்யை சம்பிரதாயமாக சந்திப்பில் உடன்பாடில்லை எனலாம்?", "எங்கள் அண்ணா வீட்டுக்கு ஒரு பூங்கொத்தோடு போய் வாசலில் பிரதிஷ்டை பண்ணினால் என்ன?" என்றெல்லாம் தற்குறித்தனமாகக் குத்திமுறியலாம். அவற்றின் மண்டைவளம் அவ்வளவு தான். மேலே நான் குறிப்பிட்ட விடயத்தை முதலமைச்சர் செய்தால், முதலமைச்சரையே திட்டும் ஜீவஜந்துக்கள் அவை.!

கருத்துகள் இல்லை