நடிகை ராதிகாவுக்கு உதவி செய்த ரஜினிகாந்த்! நெகிழ்ந்து போன ராதிகா!
ரஜினி - ராதிகா முதல் சந்திப்பு!
நடிகை ராதிகா மற்றும் ரஜினிகாந்த் இவர்களுக்கிடையே ஆன நட்பு பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களையும் ரஜினி செய்த உதவியால் நெகிழ்ந்து போன ராதிகா பற்றியும் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். சூப்பர்ஸ்டார் என்ற பட்டம் எளிதில் கிடைக்க வில்லை ரஜினிக்கு. அவர் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் பல தடைகளை கடந்து அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம் என்றால் அது பதினாறு வயதினிலே. அந்த படத்தில் ரஜினி பரட்டை என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த பரட்டை கேரக்டர் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி பேசப்பட்டது. அந்த படம் வெளியான சமயத்தில் தான் நடிகை ராதிகா சென்னைக்கு வந்துள்ளார். அதுவரை வெளிநாட்டில்தான் இருந்துள்ளார். தமிழ்நாட்டுக்கு வந்ததும் அவருக்கு சினிமா துறையில் தெரிந்த இரண்டு விஷயங்கள் என்னவென்றால்? பதினாறு வயதினிலே படமும் பரட்டை என்கிற ரஜினிகாந்தும் தான்.
சென்னைக்கு வந்ததும் சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்பட்டது ராதிகாவுக்கு. அப்போது தான் ரஜினியை சந்திக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்துள்ளது. எதேச்சையாக ரஜினிகாந்தை சென்னை உட்லண்ட்ஸ் டிரைவினில் பார்த்துள்ளார் ராதிகா. உடனடியாக அவரிடம் சென்று பேச்சு கொடுத்துள்ளார். ரஜினியும் நடிகர் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் சகஜமாக பேசியுள்ளார். இப்போது ரஜினி இவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் கூட இன்றும் மற்றவர்களிடம் பழகும் போது அதே எளிமையாக தான் பழகுகிறார். அப்படி இருக்கும் போது அந்த காலத்தில் எப்படி இருந்திருப்பார் என்று உங்களால் யூகிக்க முடிகிறது அல்லவா? சரி நாம் விஷயத்திற்கு வருவோம்.
ராதிகா அப்போது நடிகை கிடையாது. ஒரு ரசிகையாக ரஜினியை சந்தித்து பேசினார். சூப்பர்ஸ்டாரும் மிகவும் சாதாரணமாக அவரிடம் பேசியுள்ளார். அப்போது தான் பதினாறு வயதினிலே படம் வெளியான நேரம். அந்த நேரத்தில் ரஜினிகாந்த் எல்லோருக்குமே தெரிந்த நபராக மாறிவிட்டார். அந்த சந்திப்பின் போது ராதிகா ரஜினியிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். அது என்னவென்றால்? ரஜினியின் ஸ்டைல் அந்த காலம் தொட்டே இருந்து வருகிற விஷயம் தானே? அதனால் ஈர்க்கப்பட்ட ராதிகா, இதெப்டி இருக்கு? என்று ரஜினி கேட்கும் ஸ்டைலை செய்து காட்ட சொல்லியிருக்கிறார். ரஜினியும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காமல் அவருக்கு அந்த ஸ்டைலை செய்து காட்டியுள்ளார்.
ரஜினியை பேட்டி எடுத்த ராதிகா!
இதுதான் ரஜினிக்கும் ராதிகாவுக்கும் முதல் சந்திப்பு ஆகும். தனது ரசிகை ஒருவருக்கு அவர் கேட்ட ஸ்டலை செய்து காட்டினோம் என்று தான் ரஜினியும் நினைத்தார். ஆனால் அதன் பிறகு கொஞ்ச நாட்களிலேயே தெரியவந்தது அவர் நமக்கே ஜோடியாக திரைப்படங்களில் நடிப்பார் என்கிற விஷயம். ரஜினியை ஒரு பத்திரிக்கைக்காக பேட்டி எடுக்க சென்றிருக்கிறார் ராதிகா. அப்போது தான் அந்த சர்ப்ரைஸ் ஆன செய்தியை ராதிகாவுக்கு தெரியப்படுத்தியுள்ளார் ரஜினிகாந்த். அதாவது என்னுடைய அடுத்த படத்தில் நீங்கள் தான் கதாநாயகியாக நடிக்க போறீங்க என்று சொல்லியிருக்கிறார். இதைக்கேட்ட ராதிகாவுக்கோ உற்சாகம் தாங்க முடியவில்லை. அந்த படம் எது என்று இந்நேரம் கண்டுபிடித்து விட்டீர்களா? ஆம் அது தான் போக்கிரி ராஜா.
அந்த படத்தில் நடிக்கும் போது ஒரு சுவையான சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. அந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் ராதிகா ரஜினியின் இடுப்பில் குதிப்பது போன்ற காட்சி. அதை ராதிகாவால் சரியாக செய்ய முடியவில்லையாம். எட்டு முறை ரீ டேக் வாங்கி அதற்கு பிறகு தான் அந்த காட்சி சரியாக வந்ததாம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்? இத்தனை முறை ராதிகாவால் தான் இந்த காட்சியை எடுக்கிறார்கள் என்று தெரிந்தும் கூட, வலியையும் தாங்கிக்கொண்டு ரஜினிகாந்த் துளியும் முகம் சுழிக்கவில்லையாம். அதுமட்டுமல்லாமல் அந்த படத்தில் ரஜினியின் கண்ணத்தை ராதிகா கைகளால் இடித்து இடித்து பேசுவது போன்ற காட்சிகள் வரும். அப்போது ராதிகாவுக்கு நடிக்க தெரியாமல் நிஜமாக ரஜினியின் கண்ணத்தில் இடித்துள்ளார்.
ஆனால் ரஜினியோ அதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம். இந்த செய்திகளையெல்லாம் ராதிகாவே தான் தனது பேட்டிகளில் கூறியுள்ளார். படங்களில் நடிக்கும் போது சூட்டிங் முடிந்தவுடன் ரஜினி என்ன செய்வார் என்ற கேள்வி எல்லோருக்குமே வரும். இதற்கும் ராதிகா பதில் கூறியுள்ளார். சூப்பர்ஸ்டார் இடை வேளையில் புக் படிப்பார் என்று நாம் கேள்வி பட்டிருக்கோம் ஆனால் ரஜினி இடை வேளையில் எதாவது சிந்தனை செய்து கொண்டே தான் இருப்பார் என்று ராதிகா கூறியிருக்கிறார். அதனால் ரஜினியை சிந்தனை சிற்பி என்று கூட கிண்டல் செய்வாராம். இந்த செய்தி கேட்பதற்கு புதிதாக இருந்தது. எதைப்பற்றி யோசிக்கிறீங்க என்று கேட்டால் நாட்டு நடப்பை பற்றி தான் என்று சொல்வாராம்.
ரஜினி - ராதிகா தொலைபேசி உரையாடல்!
இன்னும் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் இருக்கு. ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் வெளியான சமயத்தில் ஒரு பிரபல தொலைக்காட்சியில் கபாலி படக்குழுவை இன்டர்வியூ செய்திருந்தனர். அந்த இன்டர்வியூ செய்தவர் யார் என்றால்? வேற யாரு நம்ம ராதிகாதான். பா.ராஞ்சித், அட்டகத்தி தினேஷ், கலையரசன், ஜான் விஜய், ரித்விகா எல்லோரும் அந்த இன்டர்வியூவில் கலந்து கொண்டனர். ஆனால் சூப்பர்ஸ்டார் மட்டும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அது ஏன் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். அந்த சமயத்தில் தான் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று விட்டார். அந்த நிகழ்ச்சியின் மூலமாக ராதிகா ரஜினிக்கு போன் செய்தார். அப்போது, கபாலி படத்தின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு நீங்கள் தான் காரணம் என்று சொன்னபோது,
இல்லை என்று மறுத்த ரஜினிகாந்த்., மொத்த படக்குழுவும் தான் காரணம் என்று சொன்னார். பிறகு ரஞ்சித் பேசும் போது தலைவரிடம் பிடித்த விஷயமே இதுதான். எல்லோரையும் சமமாக பார்ப்பார். அவரிடம் இந்த பாகுபாடு என்ற விஷயமே கிடையாது என்றார். அதற்கு அப்புறம் தான் நடிகை ராதிகா ஒரு சுவற்றில் சம்பவத்தை நம்ம கூட பகிர்ந்து கொண்டார். சூப்பர்ஸ்டார் உடன் நடித்துக் கொண்டிருந்த போது ஃபிரீ டைம்ல எனக்கு சென்னையை சுத்தி காட்டுங்க என்று ராதிகா கேட்டுள்ளார். ரஜினியும் சரி என்று சம்மதிக்க, அப்புறம் தான் பைக்ல கூட்டிட்டு போங்க என்று மேடம் சொல்லியிருக்காங்க.
பைக்ல தலைவர் போனார் என்றால் என்ன நடக்கும் என்பது ஊருக்கே தெரியும். கூட்டம் கூடி பெரிய இடைஞ்சலாக மாறிவிடும். இருந்தாலும் ராதிகாவுக்கு வாக்கு கொடுத்து விட்டதால் பைக்கில் கூட்டிச்சென்றுள்ளார். அப்போது ரஜினிகாந்த் ஆரம்ப காலத்தில் கஷ்டப்பட்ட இடங்களை எல்லாம் சொல்லிக்கொண்டே சென்றுள்ளார். பிறகு ஒரு பிளாட்பாரத்தை காண்பித்து இங்கு தான் நான் பல நாட்கள் படுத்து தூங்கியிருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். இதனைக்கேட்ட ராதிகாவுக்கு கண்கள் கலங்க ஆரம்பித்தது. அதன் பிறகு இவர்கள் இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்த போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இவர்களது பைக்கை முந்திக்கொண்டு வேகமாக வந்த ஒரு வண்டி, இவர்கள் பைக்கை வழிமறித்தது. அதில் அமர்ந்திருந்தவர். இவர்களை முறைத்துப்பார்த்துள்ளார். ராதிகாவுக்கோ ஒன்றும் புரியவில்லை. ஏன் இவர் இப்படி முறைத்துப்பார்க்கிறார்? யார் இவர்? எப்படியும் படத்தில் வருகிற மாதிரி இப்போது ரஜினிசார் ஒரு ஸ்டண்ட் செய்வார் என்று மனதுக்குள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ராதிகாவுக்கோ ஏமாற்றம் தான் மிஞ்சியது. அந்த வண்டியில் வந்தவர் முறைத்துப்பார்த்து விட்டு கிளம்பி விட்டார். அதன் பிறகு ரஜினியிடம் என்ன இப்படி பண்ணிட்டீங்க? நீங்க எதாவது செய்வீங்க என்று எதிர்பார்தேன் என்று சொல்ல, ரஜினிகாந்த் சொன்னாராம், அவர் என்னோட பிரதரின்லா என்று.
இதனைக் கேட்ட ராதிகாவுக்கு குழப்பமாக இருந்தது. பிரதரின்லா எதற்காக உங்களை இப்படி முறைச்சுட்டு போறார் என்று கேட்டார். அதற்கு தலைவர் சொன்னாராம், இது பாரின் இல்லம்மா! தமிழ்நாடு இங்கே இப்படி இரண்டு பேர் பைக்கில் போனா அப்படி தான் முறைப்பாங்க. என்னடா இவன் யார்கூடையோ ஊர்சுத்திட்டு இருக்கானே என நினைத்து முறைத்துவிட்டு போகிறார் என்று ரஜினி சொல்ல, அதற்கு பிறகு தான், ராதிகாவுக்கு புரிந்துள்ளது. இந்த விஷயத்தை ராதிகாவே தான் தனது இன்டர்வியூவில் பகிர்ந்து கொண்டார். சூப்பர்ஸ்டாருடன் நிறைய படங்களில் அன்றைய காலகட்டத்தில் ராதிகா நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜக்குபாய் படத்தை வெளியிட உதவிய ரஜினிகாந்த்!
அதே ரஜினிகாந்தை பொறுத்தவரை சினிமாத்துறையில் யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக வந்து நிற்பார். ஜக்குபாய் என்று ஒரு படம். முதலில் அந்த படத்தில் ரஜினி தான் நடிப்பதாக இருந்தது. அந்த படத்தின் முதல் பார்வை கூட வெளியானது. ஆனால் ஏனோ அந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை. அடுத்ததாக அந்த படத்தில் சரத்குமார் நடித்தார். அந்த படத்தை கேஎஸ்.ரவிக்குமார் இயக்கினார். அந்த படத்தை தயாரித்தது ராதிகா தான். அவர்களின் தயாரிப்பு கம்பெனி மூலமாகவே அந்த படம் தயாரிக்கப்பட்டது. ஆனால் என்ன பிரச்சனை என்றால் ஜக்குபாய் படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆவதற்கு முன்னதாகவே, இணையதளத்தில் வெளியாகிவிட்டது.
அப்படி வெளியான படத்தை கேசட்டில் பதிவேற்றம் செய்து விற்பனை செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்தது ராதிகா சரத்குமார் மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழக சினிமா துறையை சேர்ந்தவர்களும் தான். ஏனென்றால் படம் வெளியாவதற்கு முன்பே முழுப்படமும் எப்படி வெளியானது என்று எல்லோருக்குமே குழப்பமாக இருந்தது. இந்த தகவல் கிடைத்த அடுத்த நொடியே ரஜினிகாந்த் ராதிகாவுக்கு தொலைபேசியில் அழைத்துள்ளார். எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை. படத்தை உடனே ரிலீஸ் பண்ணுங்க. பணம் நான் தருகிறேன் என்று கூறியுள்ளார். இதனைக் கேட்ட ராதிகாவோ நெகிழ்ந்து போனார்.
அடுத்த நாள் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அந்த பிரஸ்மீட்டில் ரஜினியும் பங்கேற்றார். சரத்குமாரும் ராதிகாவும் அந்த சமயத்தில் கண்ணீர் விட்டு அழுதனர். அதன் பிறகு ஒருவாறாக ரஜினி செய்த உதவியால் அந்த ஜக்குபாய் படத்தை வெளியிட்டனர். அந்த திரைப்படம் சரியாக ஓடவில்லை. ரஜினிதான் அந்த படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தது. அப்படி இருந்தும் கூட சூப்பர்ஸ்டார் அவ்வளவு பெரிய உதவியை செய்துள்ளார். இதை அவர் எந்த இடத்திலும் வெளியே சொல்லவில்லை. ஆனால் உண்மை ஒரு நாள் வெளியே வந்து தான் தீரும் அல்லவா?
ராதிகாமேடம்தான் அந்த விஷயத்தை ஒரு தொலைக்காட்சி பேட்டியில் சொன்னார். முதல் ஆளாக எங்களுக்கு உதவ முன் வந்தது ரஜினிசார் தான் என்று அந்த பேட்டியில் கூறினார். இது தான் தலைவரின் குணம். யாருக்காவது எதாவது பிரச்சனை என்றால் அவரால் முடிந்த உதவியை செய்வார். அது மட்டுமல்ல, நான் தான் அவர்களுக்கு உதவி செய்தேன் என்று வெளியில் சொல்லிக்கொள்ள மாட்டார். இது போன்ற நல்ல மனிதர்களை பார்ப்பது ரொம்பவே கடினம். இந்த நல்ல மனதுக்கு அவர் என்றுமே நலமாக சந்தோஷமாக பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.!

Excessive vibration of CNC machinery whereas running, and the force exerted from the fixed shaking, can impact the sturdiness of the elements. If our report has not included the data that you're looking for, find a way to|you possibly can} reach out to our analysts CNC machining and get segments personalized. Since 1983, Laguna Tools has been a leader in offering quality machinery so much of} manufacturing sectors.
பதிலளிநீக்கு