ஸ்ரீ ராகவேந்திரரால் ரஜினிகாந்த்தின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள்! அவருக்காக ரஜினி நடித்த திரைப்படம்!
ஸ்ரீ ராகவேந்திரரும் ரஜினிகாந்த்தும்!
ரஜினிகாந்த் தீவிர ராகவேந்திரர் பக்தர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அவர் ராகவேந்திரரை பற்றி எப்போதும் சிந்தித்துப் பார்த்துக்கொண்டே தான் இருப்பார். ராகவேந்திரர் ரஜினியின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மகிமைகள் அப்படி. ரஜினி அவர்களின் ஆரம்பகால வாழ்க்கை பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். என்னதான் அவருக்குள் உழைக்க வேண்டும். பணம் சம்பாதித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணங்கள் இருந்தாலும் அவர் சற்று அந்த வயதுக்கே உண்டான செயல்களை மற்ற வாலிபர்களை போல தான் இருந்து வந்துள்ளார். அதன் பிறகுதான் ஸ்ரீ ராகவேந்திரரின் மகிமையை அறிந்து தன் வாழ்க்கை பாதையை மாற்றியமைக்க தொடங்கியுள்ளார். இது பற்றி அவரே சில பேட்டிகளில் கூறியிருக்கிறார். நீங்களும் அதை பார்த்திருப்பீர்கள்.
ரஜினிகாந்த் ராகவேந்திரரின் பக்தரான பிறகு மனம் போன படி வாழ்கையை செலுத்தாமல், தனக்கென ஒரு பாதையை உருவாக்கினார். அதன் வழியாகவே ஒரு கோட்பாடுடன் பயணம் செய்தார். அதன் பின் ரஜினியின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்தது. பட வாய்ப்புகள் வந்தது. நடிகரானார். அதன் பிறகு சூப்பர்ஸ்டார் ஆனார். இன்று அவர் இருக்கும் இடத்தை நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியவேண்டிய அவசியம் இல்லை. எப்போது ரஜினி தன்னைத்தானே கவனிக்க ஆரம்பித்தாரோ அப்போதே ராகவேந்திரரின் அருள் பரிபூரணமாக அவருக்கு கிடைக்க ஆரம்பித்தது. ஆதனால் தான் பாட்ஷா படத்தில் ஆட்டோக்காரராக நடித்திருந்தபோது, ஆட்டோவில் உன் வாழ்க்கை உன் கையில் என்று எழுதியிருக்கும். அதனை பார்த்த நக்மா, என்ன இப்படி எழுதியிருக்கீங்க? கடவுள் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? என்று கேட்பார்.
அதற்கு ரஜினிகாந்த் சொல்வார். கடவுள் இல்லாமல் நம்மெல்லாம் எப்படிங்க? நம்மை நாமே கவனிச்சுக்கிட்டா தான், கடவுள் நம்மை கவனிப்பார் என்று ரஜினி சொல்வார். அதனால் நம்மை நாம் முதலில் கவனிக்க வேண்டும். ரஜினி ராகவேந்திரர் கோவிலுக்கு வாரம் தவறாமல் சென்று கொண்டிருந்தார். திருவல்லிக்கேணி ராகவேந்திரர் கோவிலுக்கு வாரம் தவறாமல் சென்று பூஜையிலும் பங்கேற்று வந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே மந்த்ராலயம் சென்று கொண்டிருந்தார். ஆனால் அங்கு ரஜினி வாரா வாரம் வருகிறார் என்று தெரிந்தவுடம், கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது. ரசிகர்களும் பொது மக்களும் ரஜினியை பார்க்க வேண்டும் என்பதற்காக, மந்த்ராலயத்தில் குவிய தொடங்கினர். இதனால் அங்குள்ளவர்களுக்கு இடைஞ்சலாக இருந்தது.
ரஜினியை பார்க்க கூட்டம் கூடிவிடும்!
அதனால் ரஜினிகாந்த் மந்த்ராலயம் செல்வதை தவிர்த்துவிட்டு தான். இந்த திருவல்லிக்கேணியில் தான் ஸ்ரீ ராகவேந்திரர் கோவில் இருக்கிறதே, இங்கயே சென்று ராகவேந்திரரை தரிசிக்கலாமே என்று என்னிக்கொண்டு தான், திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரர் கோவிலுக்கு வாரம் தவறாமல் சென்று கொண்டிருந்தார் ரஜினிகாந்த். ஆனால் அங்கேயும் ரஜினி அடிக்கடி வருவது பொதுமக்களுக்கு தெரிந்து அங்கேயும் கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது. இதனை மனதில் கொண்டு ரஜினி, நம்வீட்டிலே தான் பூஜை அறை இருக்கே, அங்கே தான் ஸ்ரீ ராகவேந்திரரும் இருக்கிறாரே? பிறகு எதற்காக நாம் அங்கேயும் இங்கேயும் சென்று கூட்ட நெரிசலை உண்டாக்க வேண்டும்? என்று நினைத்து கொண்டு வீட்டிலேயே ராகவேந்திரரை கும்பிட ஆரம்பித்தார்.
வாழ்க்கை அப்படியே நகர்ந்து கொண்டிருந்த போது, ரஜினிக்கோ மனதில் ஒரு எண்ணம் தோன்றுகிறது. அது என்னவென்றால் ஸ்ரீ ராகவேந்திரர் நமக்காக என்னென்னமோ செய்திருக்கிறார். ஆனால் நாம் அவருக்காக என்ன செய்திருக்கிறோம். கடவுளுக்கு நாம் ஏதும் செய்ய முடியாது தான். ஆனால் அவரின் புகழை பரப்புவதற்காகவாவது ஏதாவது செய்தால் நமக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்று ரஜினி நினைத்தார். அதனால் அவர் எடுத்த முடிவு தான் ஸ்ரீ ராகவேந்திரர் திரைப்படம் உருவாக முக்கிய காரணமாக அமைந்தது. தனது நூறாவது படம் ராகவேந்திரர் படமாக தான் இருக்க வேண்டும் என்று அப்போதே தீர்மானம் எடுத்துக்கொண்டார். அதன் பிறகு அந்த நாளும் வந்தது. ராகவேந்திரர் படத்தை உருவாக்க ரஜினிகாந்த் முடிவு செய்தும் விட்டார்.
ஆனால் அங்கே தான் ஒரு மிகப்பெரிய சிக்கல் ஒன்று வருகிறது. இந்த மாதிரி ஸ்ரீ ராகவேந்திரர் படம் பண்ணப்போகிறேன் நீங்கள் தான் தயாரிக்கவேண்டும் என்று கே பாலசந்தரிடம் ரஜினிகாந்த் சொல்கிறார். அவரும் சற்று யோசித்து விட்டு சரி நம்ம கவிதாலயா பேனர்ல ஸ்ரீ ராகவேந்திரர் படம் பண்ணுவோம் என்று சொல்லிவிட்டார். ஆனால் இந்த படத்தை இயக்குவதில் தான் பெரிய சிக்கலே காத்திருந்தது. அன்றைய காலகட்டத்தில் ரஜினியை வைத்து நிறைய படங்கள் இயக்கியவர் எஸ்பி முத்துராமன். அவர் தான் இந்த படத்தையும் இயக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் ஆசைப்படுகிறார். ஆனால் முத்துராமனோ தயங்குகிறார். நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்? இது பணத்திறகாக நாம் செய்யும் படம் கிடையாது. எனது மன திருப்திக்காக செய்யும் படம்.
ராகவேந்திரர் படம் இயக்க தயங்கிய எஸ்பி முத்துராமன்!
அதனால் லாப நஷ்டத்தை பற்றியெல்லாம் நீங்க கவலை பட வேண்டாம் என்று ரஜினி சொல்லிய பிறகும் முத்துராமன் தயங்குகிறார். சரி, நீங்கள் தயங்குவதற்கான காரணத்தை நீங்களே சொல்லுங்கள் என ரஜினி கூற, முத்துராமன் பேச ஆரம்பித்தார். இல்லை ரஜினி, நான் இந்த மாதிரி புராண படங்கள் எல்லாம் எடுத்ததில்லை. அது மட்டுமல்லாமல் என் குடும்பமே சுய மரியாதை இயக்கத்தில் உள்ளது. அப்படி இருக்கும் போது நான் இந்த படத்தை இயக்குவது அவ்வளவு சரியாக இருக்காது என்று தான் தயங்குகிறேன் எனறார் எஸ்பி முத்துராமன். ஆனால் ரஜினியோ முத்துராமனை தவிர வேறு இயக்குநரை வைத்து ராகவேந்திரர் படம் எடுக்க விரும்பவில்லை. அதனால் முத்துராமனை கூட்டிக்கொண்டு நேராக, கேபியின் வீட்டுக்கு செல்கிறார் ரஜினி.
கே பாலசந்தர் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு கேபி தனது கருத்தை தெரிவிக்கிறார். எஸ்பிஎம் நீங்க ரஜினியை வைத்து பலதரப்பட்ட படங்களை எடுத்து இருக்கீங்க. அதனால நான் சொல்லிதான் ரஜினியை பற்றி உங்களுக்கு தெரியவேண்டிய அவசியம் இல்லை. அவன் தான் ஆசைப்படுறான். இவ்வளவு தூரம் உங்களைவைத்துதான் படம் எடுக்கவேண்டும் என்று சொல்கிறான். அதனால் நீங்களே இயக்குங்க என்று சொன்னார் கேபி. அப்போதும் கூட முத்துராமனுக்கு கொஞ்சம் தயக்கம் தான். கடைசியில் பேச்சுவார்த்தையின் முடிவில் இந்த படத்தை இயக்க ஒப்புக்கொண்டார் எஸ்பி முத்துராமன். அதன் பிறகு கிடுகிடுவென ஸ்ரீ ராகவேந்திரர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. மூன்று மாத காலம் படப்பிடிப்பு நடந்தது. அதன் பிறகு படத்தின் முழு வேலைகளும் முடிந்து ஸ்ரீ ராகவேந்திரர் படம் 1/1/1985 ல் வெளியானது.
ஸ்ரீ ராகவேந்திரர் படத்தை ரசிகர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அத்தனை ஆண்டுகளாக ஸ்டைல் மாஸ் என கமர்சியல் படங்களில் நடித்து விட்டு, இப்படி ஒரு அமைதியான சாந்தவடிவில் ரஜினி நடித்திருந்ததை ரசிகர்கள் ஏற்கவில்லை. இந்த படம் நூறு நாட்கள் ஓடினாலும் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை. இதனால் ரஜினி ராகவேந்திரர் மீதே கோபம் கொண்டார். இந்த படம் பணத்திற்காக வியாபாரத்திற்காக எடுக்கவில்லை. உங்கள் புகழை பரப்புவதற்காக எடுக்கப்பட்ட படம். ஆனால் அதையே உங்களால் வெற்றியடைய செய்ய முடியவில்லை என்றால் உங்களுக்கு என்ன மகிமை இருக்கிறது என்று ரஜினி ஸ்ரீ ராகவேந்திரர் மீது கோபப்பட்டு ஒரு மாத காலம் கோவிலுக்கு செல்லாமலே இருந்தார்.
ராகவேந்திரரே சொன்னது போல் உணர்ந்தார் ரஜினி!
அதன் பிறகு ஒரு நாள் கன்னட நடிகர் ராஜ்குமார் ரஜினியை சந்தித்தார். அவரும் கன்னடத்தில் ஸ்ரீ ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்திருந்தார். அந்த படத்தில் ராஜ்குமார் தான் நடித்திருந்தார். அந்த படத்திற்கு மந்த்ராலய மகாத்மே என்று பெயர் வைத்திருந்தார்கள். ரஜினியை சந்தித்த ராஜ்குமார் நீங்கள் நடித்த ஸ்ரீ ராகவேந்திரர் படத்தை பார்க்க வேண்டும் என்று கூற ரஜினியும் ராகவேந்திரர் படத்தின் கேஸட்டை ராஜ்குமாருக்கு வழங்குகிறார். இந்த படத்தை பார்த்து விட்டு ராஜ்குமார் ரஜினியிடம், என் படமும் முதலில் சரியாக போகவில்லை. அதன் பிறகு தான் நல்ல வரவேற்பு கிடைத்தது. உங்கள் படத்திற்கும் அது போல தான் இனிவரும் காலங்களில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று சொன்னார். இதனை கேட்ட ரஜினிக்கு ஸ்ரீ ராகவேந்திரரே நேரில் வந்து சொன்னது போல் இருந்தது. அந்த நொடி முதல் மீண்டும் ஸ்ரீ ராகவேந்திரரை கும்பிட ஆரம்பித்தார்.
அவர் சொன்னது போல அதன் பிறகுதான் ஒவ்வொரு இடத்திலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பொது மக்களும் இந்த படத்தை ரசித்துப்பார்த்தனர். இன்னொரு சம்பவம் கூட நடந்தது. இதனை ரஜினியே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். ரஜினி விமானத்தில் சென்ற போது, அவருக்கு பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த ஒரு வயதான பெண்மணி ரஜினியை பார்த்து, தம்பி நீ ஸ்ரீ ராகவேந்திரர் படம் நடித்தாயே அதில் சிறப்பாக நடித்திருந்தாய். அந்த படத்தை பார்த்தால் அப்படியே ஸ்ரீ ராகவேந்திரர பார்த்த மாதிரி தான் இருக்கும். நான் ஸ்ரீ ராகவேந்திரர் படத்தின் கேஸட்டை வாங்கி வைத்துள்ளேன். தினசரி அந்த படத்தை ஒரு முறையாவது பார்த்து விடுவேன். ஆனால் அப்படி ஒரு படத்தில் நடித்த நீ, மற்ற படங்களில் பேசக்கூடாத வார்த்தைகள் எல்லாம் பேசி நடிக்கிறாயே? அதை தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று அந்த வயதான பெண்மணி கூறியிருக்கிறார்.
அந்த சம்பவத்திற்கு பிறகு ரஜினி படங்களில் அது போன்ற வார்த்தைகள் அதிகம் வராது. இதனை எதற்காக சொல்கிறேன் என்றால் அத்தனை வருடம் கழித்து ரஜினி நடித்த ஸ்ரீ ராகவேந்திரர் படத்தை தினசரி அந்த பெண்மணி பார்க்கிறார் என்றால் எந்த அளவுக்கு அந்த படத்தை அவர் நேசித்திருக்க வேண்டும். அது தான் ஸ்ரீ ராகவேந்திரரின் மகிமை. இன்றளவும் கூட இந்த படத்தை பார்க்க மக்கள் விரும்புகிறார்கள். இந்த திரைப்படம் யூட்டியூப் தளத்தில் நிறைய சேனல்களின் பதிவிட்டிருக்கிறார்கள். எல்லா சேனல்களிலும் சராசரியாக பத்து லட்சம் பார்வைகளுக்கு குறையாமல் பார்த்திருக்கிறார்கள். இதன் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம் ராகவேந்திரர் படத்துக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதைப் பற்றி.
ரஜினியை கவர்ந்த ராகவேந்திரர் புகைப்படம்!
இந்த சமயத்தில் இன்னொரு விஷயமும் நினைவுக்கு வருகிறது. கிரேஸி மோகனும் ராகவேந்திரர் பக்தர் தான். கிரேஸி மோகனின் அண்ணனிடம் ரஜினிகாந்த் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் வீட்டில் ராகவேந்திரர் புகைப்படம் ஒன்று இருந்துள்ளது. அது ரஜினியின் கண்ணில் பட , அந்த ராகவேந்திரர் படம் நன்றாக இருக்கிறதே எங்கே வாங்கினீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் இந்தாங்க இந்த படம் என்னிடம் இருப்பதை விட உங்களிடம் தான் இருக்க வேண்டும் என்று அந்த ராகவேந்திரர் படத்தை ரஜினியிடம் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரஜினிகாந்தின் பூஜை அறையில் இருக்கிறது என்று கிரேஸி மோகனின் அண்ணன் ஒரு பத்திரிக்கை பேட்டியில் கூறினார்.
அதே போல இன்னொரு விஷயம் இருக்கிறது. ராகவா லாரன்ஸ் கூட ராகவேந்திரர் பக்தர் தான் என்பது உங்களுக்கு தெரியும். ரஜினி நடித்த ஸ்ரீ ராகவேந்திரர் படம் பார்த்து விட்டுதான் மந்த்ராலயம் சென்று வழிபட்டு தன்னோட உடம்பு சரியானதாக ராகவா லாரன்ஸ் நிறைய பேட்டிகளில் கூறியிருக்கிறார். அதனால் தான் அவரது பெயரைக்கூட ராகவா என்று மாற்றிக்கொண்டார். லாரன்ஸ் சினிமாவில் நுழைந்ததற்கு காரணமே ரஜினி தான். ஒருமுறை ரஜினியிடம் டான்ஸ் ஆடி காமித்திருக்கிறார் லாரன்ஸ். அதைப்பார்த்துவிட்டு ரஜினியோ வெரிகுட் என சென்று விட்டாராம். அதன் பிறகு அந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் நாளன்று ராகவா லாரன்ஸை அழைத்து நாளைக்கு வீட்டுக்கு வாங்க. உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் என்று சொல்லிவிட்டு அட்ரஸை கொடுத்துவிட்டு ரஜினி போய்டாராம்.
லாரன்ஸை சினிமாவுக்குள் அழைத்து வந்தது ரஜினி தான்!
அந்த நாள் லாரன்ஸ்க்கு தூக்கமே வரவில்லையாம். அடுத்த நாள் ரஜினி வீட்டுக்கு சென்ற லாரன்ஸ்க்கு இன்ப அதிர்ச்சி. ரஜினி என்ன சொன்னார் தெரியுமா? டான்ஸ்ல இவ்ளோ திறமையை வச்சிக்கிட்டு ஏன் ஸ்டன்ட் யூனியன்ல இருக்கீங்க. நான் ஒரு லெட்டர் தருகிறேன். இதை பிரபு தேவாகிட்ட கொடுங்க என்று சொல்லி ஒரு லெட்டர் கொடுத்துட்டு ரஜினி சொல்லீருக்கார். நான் யாருக்கும் கேட்காம உதவி செய்ய மாட்டேன். உங்களுக்கு ஏதோ செய்யனும்னு தோனுச்சு என்று ரஜினி சொல்ல ஆனந்த கண்ணீருடன் விடை பெற்றார் லாரன்ஸ். அதன் பிறகு அந்த லெட்டரை எடுத்துக்கொண்டு பிரபு தேவாட்ட போகிறார் லாரன்ஸ். ஆனால் அங்கே ஏகப்பட்ட ஆட்கள் வெயிட்டிங்ல இருந்திருக்காங்க.
இதனைப் பார்த்த லாரன்ஸ்க்கு ரொம்பவே கஷ்டமாகிவிட்டது. நமக்கு முன்னாடியே இங்க ஏகப்பட்ட ஆட்கள் இருக்காங்க. இங்க எங்க நமக்கு சான்ஸ் கிடைக்கப்போவுது என்று யோசித்துக்கொண்டு இருந்தபோது, ரஜினி சார் அனுப்பிய ஆள் யாரு என்று உள்ள இருந்து ஒருத்தர் கேட்க, லாரன்ஸ் நான் தான் என்று உள்ள போக அதற்கு பிறகு தான் லாரன்ஸ் சினிமாவுக்குள்ள என்ட்ரி ஆயிருக்காரு. ரஜினி லெட்டர் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் பிரபுதேவாவுக்கு கால் செய்து இந்த மாதிரி ஒருத்தர் வருவார் நல்ல டேலன்டான ஆள். உங்களுக்கு அசிஸ்டன்ட்டா வச்சுக்குங்க என்று ரஜினி சொல்லியிருக்கிறார். அதனால் தான் லாரன்ஸ்க்கு இந்த வாழ்க்கையே கிடைத்தது. இதை எதற்காக சொல்கிறேன் என்றால் லாரன்ஸ் இதுபற்றி பேசும்போது, நான் ராகவேந்திரர் சாமியத்தான் கும்பிடுகிறேன் என்ற விஷயம் ரஜினி சாருக்கு தெரியாது. அதே போல நானும் அவருகிட்ட உதவி என்று கேட்கல. ரஜினியும், கேட்காம யாருக்கும் உதவி செய்யமாட்டாராம். அப்படியிருக்கும் பட்சத்தில் இப்படி நடந்ததற்கு காரணம் ஸ்ரீ ராகவேந்திரர் சாமிதான் என்று ராகவா லாரன்ஸ் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

YouTube channel dedicated to Bet9ja channel
பதிலளிநீக்குBet9ja is a new streaming platform that's aimed to bring 4k youtube to mp3 in a streamer with a lot of quality and fast, while it focuses on the gambling and betting markets